Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில்.. இனி "இதையும்" தரப்போறாங்களாம்.. தேங்காய் எண்ணெய்யா.. அப்படின்னா பாமாயில்?.. தமிழக அரசு மாஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் பொருட்களில் கூடுதலாக மற்றொரு பொருளை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கான அறிவிப்பினையும் திமுக அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம், பொங்கல் பரிசுத் தொகுப்பில் எதிர்க்கட்சிகள் சில பிரச்சனைகளை கிளப்பின.. குறிப்பாக, பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது குறித்து பல தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனர்.. இதனால், விவசாயிகளும் ஏமாற்றமடைந்தனர்.

எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

 ration big announcement: Tamil nadu government plans to provide coconut oil in ration shops in 4 districts

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் செங்கரும்பும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு உடனடியாக அரசு தரப்பில் வெளியானது..

தேங்காய் எண்ணெய்: இதற்கு பிறகு, பாஜகவினர் தேங்காய் பிரச்சனையை ஆரம்பித்தனர்.. பொங்கல் பரிசு தொகுப்புடன் தமிழக அரசு தேங்காய்கள் வழங்க வேண்டும் என்று கூறி, தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். மேலும், பள்ளி -மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்த கோரியும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.. இதற்கு திமுக அமைச்சர், "மோடி வேண்டுமானால் தேங்காய் கொடுக்கட்டுமே.. அப்படி தந்தால், நாங்கள் அதனை வரவேற்கிறோம்" என்றும் கருத்து கூறியிருந்தார்.

நியாய விலை கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, ஏற்க வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவும், அன்றைய தினம் தமிழக அரசை வலியுறுத்தியிருந்தார்..

அமைச்சர் அறிவிப்பு: இதற்கு பிறகு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "பாஜக கட்சி அரசியல் ஆதாயத்துக்காக போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

 ration big announcement: Tamil nadu government plans to provide coconut oil in ration shops in 4 districts

இந்நிலையில், அதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருக்கும் ரேஷன் பொருட்கள் கையிருப்பு மற்றும் அதனை ரேஷன் கடைகளில் பிரித்து கொடுப்பது தொடர்பான மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி, முக்கிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கினார்.

கருவிழி ஸ்கேன்: "பொதுமக்கள் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் அட்டை தொலைந்தாலும், இதே நடைமுறையில் நகல் வழங்க வேண்டும். பயோ மெட்ரிக் மற்றும் கண் கருவிழி மூலம் ஸ்கேன் செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இந்த மாதத்திற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் க்யூ ஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் நடைமுறை கொண்டுவரப்படும்.

தமிழ்நாட்டில் மாதம் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் கோதுமை தேவை. இதனை 8 ஆயிரம் டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டது. இதுதொடர்பாக, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் டெல்லி சென்று கேட்க இருக்கின்றனர். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

சபாஷ் திமுக: முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்..

அமைச்சர் சக்கரபாணியின் இந்த அறிவிப்பானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.. ஆனால், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் தரப்பட வேண்டும் என்பதைதான், கடந்த கால கோரிக்கையாக இருந்தது.. அந்தவகையில், இப்போது பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய்யா? அல்லது தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயுடன், பாமாயிலும் வழங்கப்படுமா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரவில்லை.

ஆனால், மலிவு விலையில் ரேஷன் கடையில் வழங்கப்படும் தேங்காய் எண்ணெய், மாநிலம் முழுவதுமுள்ள கடைகளில் விரைவில் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+