அள்ளிப்போடுங்க.. ரேசன் கார்டுதாரர்களை அதிர வைத்த "ரேஷன் அரிசி".. சாட்டையை சுழட்டுகிறது தமிழக அரசு
சென்னை: ஒரே நாளில் நேற்று, பொள்ளாச்சியில் 800 கிலோ ரேஷன் அரிசியும், திருச்சியில் 450 கிலோ ரேஷன் அரிசியும் பகீரை கிளப்பி உள்ளன.. என்ன நடந்தது?
தமிழகத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுத்து நிறுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. ரேஷன் பொருட்களை பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டபடியே உள்ளது..

அதிகாரிகள்: இதைத்தவிர, உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், அரிசி கடத்தலில் ஈடுபடுவோர் மீதான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.
எனினும், இதுபோன்ற அரசின் நடவடிக்கைகளால், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சமீபத்தில்கூட, தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கிறது.. இதற்காகவே சில புரோக்கர்களும் உள்ளதாக தெரிகிறது.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்...
நேற்றுகூட, பொள்ளாச்சியில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 800 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.. இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்துள்ளனர்..
பகீர் தகவல்: இவர்களிடம் விசாரணை நடத்தியதில், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை பதுக்கி வைத்துவிடுகிறார்களாம். பிறகு, அந்த அரிசிகளை மூட்டை கட்டி, கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்துவிடுவதாகவும் வாக்குமூலம் தந்துள்ளனர்.
அதேபோல, திருச்சி ரோட்டில் 450 கிலோ ரேஷன் அரிசி கொட்டிக் கிடந்துள்ளது.. மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் ரேஷன் அரிசி மூட்டைகள் கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்திருக்கிறது..
ரேஷன் அரிசி மூட்டைகள் : அதனால், திருவெறும்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, ரோட்டிலேயே 6 மூட்டைகளில் ரேஷன் அரிசி கிடைப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.. அதுமட்டுமல்ல, அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்துக்கு அருகிலிருந்த வீட்டில், 3 மூட்டை ரேஷன் அரிசி இருந்திருக்கிறது. இதுகுறித்து அந்த வீட்டு ஓனரிடம் போலீசார் விசாரித்தனர்.
அதற்கு அவர்கள், "தாங்கள் வெளியில் சென்று இருந்ததாகவும், யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து, வீட்டு வாசலுக்குள் போட்டுவிட்டு போய்விட்டதாகவும், இந்த அரிசி மூட்டைக்கும், தங்களுக்கும் சம்பந்தம் இல்லை" என்றும் சொல்லிவிட்டார்கள். இதையடுத்து அங்கிருந்த மொத்தம் 40 கிலோ ரேசன் அரிசியை திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்..
உரிய விசாரணை: இருந்தாலும், 450 கிலோ ரேஷன் அரிசியை, ரோட்டில் வீசி சென்றது யார்? உண்மையிலேயே அருகில் உள்ள வீட்டுக்காரருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? 450 கிலோ அரிசி மொத்தமாக எப்படி கிடைத்திருக்கும்? என்றெல்லாம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications