ரேஷனில் இனி "இந்த பொருள்" கிடைக்காதா? திடீர்னு வரும் தட்டுப்பாடு.. ஓடோடி வந்து தாங்கும் தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளிலில் அரிசிக்கு தட்டுப்பாடு வரலாம் என்று கூறப்படுகிறது.. எனினும் இதுகுறித்து தமிழக அரசு நிம்மதி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. என்னாச்சு?
சாப்பாட்டு அரிசியின் விலை, 2 மாதங்களுக்கு முன்பே அதிகரிக்க துவங்கிவிட்டது.. இந்த விலை உயர்வுக்கு அப்போது சில காரணங்கள் சொல்லப்பட்டன.. குறிப்பாக தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பருவமழை குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்..

இயற்கை சீற்றம் : மழை, வெள்ளம் காரணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் நெல், அரிசி போன்றவற்றின் வரத்து குறைந்துவிட்டதால்தான் அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.. பேக்கேஜ் செய்யப்பட்ட அரிசி, சோளம் போன்றவற்றை, 5 சதவீத ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வருவதற்கான அறிவிப்பு வெளியானதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குறுவை சாகுபடி வெகுவாக குறைந்துவிட்டதால்தான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.. காவிரி நீர் பற்றாக்குறைதான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள். குறுவை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டு, கர்நாடகாவிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு வரும் அரிசி லோடுகளின் எண்ணிக்கை குறைந்ததுதான், அரிசி விலை உயர்ந்துள்ளது என்றார்கள்.
ரேஷன் அரிசி: ஆனால், இவை அனைத்துமே பிரதான காரணம் என்பதை மறுக்க முடியாது. இறுதியில் நெல்கொள்முதல் வெகுவாகவே, குறைந்துவிட்டது. வழக்கமாக, இந்திய உணவு கழகம் சார்பில், விவசாயிகளிடம் இருந்து தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
நடப்பு நெல் கொள்முதல் சீசன் செப்டம்பர் 1ல் துவங்கியது.. ஆனால், மழை அவ்வளவாக இல்லாததால் டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுவிட்டது.. அதனால், இந்த மாதம் 8ம் தேதி வரை, 92,954 விவசாயிகளிடமிருந்து, மொத்தம் 5.28 லட்சம் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு: இதற்காக அவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், 1,088 கோடி ரூபாய் வழங்கியிருக்கின்றன.. ஆனால், முந்தைய சீசனில் இதே காலத்தில் நெல் கொள்முதல், 8.35 லட்சம் டன்னாக இருந்தது. இப்போது 3 லட்சம் டன்னுக்கு மேல் குறைந்துவிட்டதால், ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியிருப்பதாக சொல்கிறார்கள்.
இருந்தாலும், பொங்கல் அறுவடைக்கு பிறகு, நெல் வரத்து அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது. அப்படியே அரிசிக்கு தட்டுப்பாடு வந்தாலும்கூட, பிற மாநிலங்களில் இருந்து வாங்கியாவது, ரேஷன் கடைகளில் தட்டுப்பாடின்றி அரிசி வினியோகம் செய்யப்படும் என்று அரசுத்துறை சார்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications