ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. இனி இதை செய்தால் "ரேஷன் கார்டு" ரத்தாகிவிடும்.. சபாஷ் உத்தரவு
சென்னை: ரேஷன் அரிசி குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதியை தந்து வருகிறது.
தமிழகத்தில் செயல்பட்டு ரேஷன் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் தமிழகத்தில் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.

ஸ்டாலினுக்கு கடிதம்: இந்நிலையில், கடந்த மே மாத இறுதியில், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமிருந்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.
அதில், "தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு தொடர்ந்து அரிசி கடத்தப்படுகிறது. ஏழு வழித்தடங்கள் வழியாக, கார், பைக், லாரிகள் மூலம் அரிசியை கடத்துகிறார்கள். அந்த அரிசி ஆந்திராவிலுள்ள ஆலைகளில் பாலிஷ் செய்யப்பட்டு, கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது. எனது சொந்ததொகுதியான குப்பம் தொகுதியில், கடந்த 16 மாதங்களில் 13 அரிசி கடத்தல் வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
சந்திரபாபு நாயுடு: சந்திரபாபு நாயுடுவின் அந்த கடிதம் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இதற்கு பிறகு, முதல்வர் ஸ்டாலினே நேரடியாக தலையிட்டு, இதுகுறித்து தீவிர நடவடிக்கையை எடுக்கும்படி காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்தார்... இதையடுத்து, ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று காவல்துறை பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டது.
அதுமட்டுமல்லாமல், ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ரேஷன் அரிசி கடத்தல்: அதிலும் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் நடமாட்டம் தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.. ஓரளவு தடுக்கப்பட்டும் உள்ளது.
இதனிடையே, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் வி.ராஜாராமன், முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.. அதில், ரேஷன் பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும்.
1800 599 5950: இந்தக் குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதாம்.. இதற்காகவே சில புரோக்கர்களும் உள்ளதாக தெரிகறது.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்...
இதன்காரணமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்றும் புகார்கள் கிளம்பி உள்ளன.. இந்த நிலையில் ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளும் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அரிசியை கடத்தி கொண்டு செல்லும் வாகனங்கள் அதனை விற்பனை செய்வோர் குறித்த விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
எச்சரிக்கை: மேலும் மாநில எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, அரிசியை கடத்துபவர்களை கண்டறிந்து, அவர்களின் ரேஷன் கார்டுகளையும் பறிமுதல் செய்து அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் தமிழகமெங்கும் இனி கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் நம்பப்படுகிறது..












Click it and Unblock the Notifications