அரிசி அட்டைதாரர்கள் அலர்ட்.. ரேஷன் வாங்கிட்டீங்களா? ரேசன் கடை ஊழியர்கள் அதிரடி .. தமிழக அரசு முடிவு?
சென்னை: தமிழக அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.. இது தொடர்பான அறிவிப்பு ஒன்றும் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, ரேஷன் ஊழியர்களின் பங்கு அபரிமிதமானது.. தமிழக அரசும், பண்டிகை மற்றும் சிறப்பு நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, ஊக்கத்தொகைகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அதாவது, கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு வழங்குகிறது..

ரேஷன் கடை: அதேபோல, பண்டிகை நாட்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை இருப்பதில்லை.. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வேறொரு தினங்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. எனினும், தங்களது கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதில்லை என்ற வருத்தம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு இருந்து வரவே செய்கிறது.
குறிப்பாக, பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும், அகவிலைப்படியை உயர்த்த வேண்டும், தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும், சரியான எடையில் தரமான பொருட்கள் பொட்டலங்களாக வழங்கப்பட வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அறிவிப்பு: இந்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படாததால், மீண்டும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.. நாளை அதாவது 13ம் தேதி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ஜெயசந்திரராஜா சொன்னதாவது:
பொது வினியோக திட்டத்தில் மக்களுக்கு பயோமெட்ரிக் பதிவு செய்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 2016ல் விற்பனை முனையங்கள் வழங்கப்பட்டன. அதனை மேம்படுத்தி வழங்க வேண்டும்.. எடை மோசடியை தவிர்க்க அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக ரேஷன் கடைகளுக்கு வழங்க வேண்டும்.
பணியாளர்கள்: பல மாவட்டங்களில் பொருட்களை ரேஷன் கடைகளில் இறக்க கட்டாய இறக்கு கூலி வசூலிக்கப்படுகிறது. பணியின்போது இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். வேறு மாவட்டங்களுக்கு பணிமாறுதல் கேட்கும் பணியாளர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications