குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இந்த தேதி நோட் பண்ணுங்க.. ரேஷன்தாரர்களுக்கு தமிழக அரசு அதிரடி
சென்னை: பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் மக்களுக்கு தேவையான, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. குறிப்பாக, அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக இதன்மூலம் பலன்களை பெற்று வருகின்றனர்.

தமிழக அரசு: தமிழக அரசு அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமம் காக்கப்பட்டு வருகின்றன.. அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகள் உட்பட அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும், இந்த ரேஷன் கார்டு மூலமாகவே வழங்கப்படுகின்றன..
அதேபோல, ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நடுவில், பொதுமக்களின் நன்மை கருதி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
விண்ணப்பங்கள்: அதாவது, ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவே, குறைதீர்ப்பு முகாம்களையும் தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகிறது.
இந்த முகாம்கள் மூலம், ரேஷன் கடைகளில் அட்டைதாரர்களுக்கு உள்ள குறைகள் நேரடியாக கேட்டறியப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.. அந்தவகையில், தற்போதும் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறைகள்: பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைத்தீர் முகாம் டிசம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது... ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்று தங்கள் குறைகளை எடுத்து சொல்லலாம்.. மேலும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தால் உள்ளிட்ட பொது விநியோக திட்டம் தொடர்பான சேவைகளை மேற்கொள்ளலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படுவதுடன், மேலும், நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்றுகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
முகாம்கள்: அதேபோல, சேவைகளில் ஏதாவது குறைபாடுகள் குறித்த புகார்கள் இருந்தாலும், அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications