சர்க்கரை அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. வீட்டுக்கே வர்றாங்களாமே.. ரேஷன் கார்டு ரெடியா வைங்க.. சபாஷ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாட்களுக்கு முன்பு ரேஷன்கடை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு போடப்பட்டுள்ளது.. ஊழியர்களிடம் அதிகாரிகள் என்ன சொன்னார்கள் தெரியுமா?

அந்தியோதயா ரேஷன் கார்டுகள் என்பவை, பயனாளிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையாகும்.. இந்த அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் கார்டுகள், அரசாங்கத்தால் அந்த்யோதயா குடும்பங்களாக அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன..

Ration Card Holders and what is the Major instructions to the Tamil Nadu Ration Shops about Antyodaya ration cards

ரேஷன் கார்டுகள்: ஒவ்வொரு குடும்பமும் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவு தானியங்கள் பெற உரிமை உண்டு. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு அந்த்யோதயா ரேசன் கார்டு வழங்கப்படுகிறது.

அந்தவகையில், தமிழக ரேஷன் கடைகளிலும் முன்னுரிமையுள்ள, முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அரிசி வழங்கப்படுகிறது. மொத்தம் 18.61 லட்சம் அந்தியோதயா ரேஷன் கார்டுகளும், 95.66 லட்சம் முன்னுரிமை கார்டுகளும் உள்ளன. எனவே, மத்திய அரசு அரிசி, மாநில அரசு அரிசி என தனித்தனியாகப் பிரித்து ரசீது பதிவு செய்யப்படுகிறது.

அரிசி: அந்தியோதயா பிரிவில் கார்டுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், முன்னுரிமை பிரிவு கார்டில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா, 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை தமிழகத்திற்கு மத்திய அரசு இலவசமாக வழங்குகிறது.

அந்தியோதயா கார்டுகளில் 65.47 லட்சம் பேரும், முன்னுரிமை கார்டுகளில், 2.99 கோடி பேரும் தற்போது உறுப்பினர்களாக உள்ளனர்.. அவர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க மத்திய அரசு தற்போது உத்தரவிட்டுள்ளதால், ரேஷன் கடைகளில் முன்னுரிமை, அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு நபரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது.

என்ன காரணம்: இதுவரை 66 சதவீதம் பேரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டிருக்கிறதாம். மீதியுள்ள பயனாளிகளின் விரல் ரேகை பெறும் பணிகுளை வருகிற 29ம் தேதிக்குள் முடிக்குமாறு ரேஷன் ஊழியர்களுக்கு, உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ரேஷன் கார்டுதாரர் வீட்டிற்கு, விரல் ரேகை கருவியை எடுத்துச்செல்லுமாறும் உத்தரடப்பட்டுள்ளதாம்.. இது தொடர்பாக ரேஷன் ஊழியர்களுக்கு சிறப்பு கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை அதிகாரிகள் வழங்கியிருப்பதால், துரித வேலை ஆரம்பமாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+