ரேஷன்தாரர்களுக்கு குட்நியூஸ்.. விரைவில் புது ரேசன் கார்டு.. "கொஞ்சம் பொறுங்க".. தமிழக அரசு நம்பிக்கை
சென்னை: புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்துள்ள காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த நடவடிக்கையை தமிழக அரசு எப்போது எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது.. அந்தவகையில், இதுவரை ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு இந்த உதவி தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ந்தேதிக்குள் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுகிறது.
மகளிர் உரிமைத்திட்டம்: ஆனால், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் காரணமாக கூட்டுக்குடும்பமாக இருந்த பலர், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதனால், திடீரென ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது. அதாவது, உணவு வழங்கல் துறை, புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி நடைபெறவில்லை.. எனினும், புதிதாக திருமணம் ஆனவர்கள் தங்களது பெற்றோர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கம் செய்து ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துள்ளனர்.
கூட்டுக்குடும்பம்: அதேபோல, தனி குடும்ப அட்டைக்காக ஏராளமானோர் விண்ணப்பித்து கதத்திருக்கிறார்கள்.. அதேபோல, இதுவரை கூட்டுக்குடும்பமாக இருந்தவர்கள், தனியாக வாடகை வீடுகளில் வசித்து புதிய ரேசன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். இதற்கு நடுவில், இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் கடந்த 5 மாதமாகவே மேற்கொள்ளப்படவில்லை.
அனைத்து தேவைகளுக்குமே, ரேஷன் கார்டுகள்தான் அடிப்படை ஆதாரமாக உள்ளதால், அதனை வாங்குவதற்காக விண்ணப்பித்து பல மாதங்களாகியும் கிடைக்கவில்லையே என்று பொதுமக்கள் குமுறுகிறார்கள்.. மகளிர் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே புதிய ரேஷன் கார்டு வழங்குவது நின்றுவிட்டதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஆன்லைன்: இது குறித்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் சொல்லும்போது, "புதிய ரேசன் கார்டுகள் மீதான கள ஆய்வு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.. அதிகாரிகள் எப்போது செயல்பாட்டை அனுமதிக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. அதற்கான உரிய நடவடிக்கை தொடங்க அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம்.. ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications