சர்க்கரை அட்டைதாரர்களுக்கு அதிரடி.. இந்த 2 பொருளையும் நாளேயே ரேஷனில் வாங்கிடுங்க.. இல்லாட்டி சிக்கல்
சென்னை: தமிழகத்தின் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் பெற்றுக் கொள்வதற்கான முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது தொடர்பாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியிடப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் என்னென்ன?
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மானிய விலைகளிலும், இலவசமாகவும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.. ஆனால, இதில், துவரம் பருப்பு, பாமாயில் இந்த 2 பொருட்கள் மட்டும், ஆகஸ்ட் மாதத்தில் சரியாக வழங்கப்படவில்லை என்ற புகார் பரவலாக எழுந்தது.

குற்றச்சாட்டு: ஆகஸ்ட் மாதம் மட்டுமல்லாமல், கடந்த சில மாதங்களாகவே இந்த பொருட்களை, முறையாக விநியோகிக்கவில்லை என்றும், கடந்த மே மாதம் முதலே பாமாயிலுக்கும், பருப்புக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் ரேஷன்தாரர்கள் அதிருப்தியும், புகார்களும் தெரிவித்து வந்தனர். எனவே, மே மாதத்திற்கான பொருளை ஜூன் மாதம் வாங்கலாம் என்று தமிழக அரசு தரப்பில் கூறியிருந்தாலும், பல கடைகளில் போதிய இருப்புகள் இல்லாமல் மக்களால் வாங்க முடியவில்லை.
அதனால்தான், ஆகஸ்ட் மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5 அதாவது நாளை வரை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குடும்ப அட்டைதாரர்கள்: இது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
"பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம்.
அறிவிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications