Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன்ல மாற்றம்.. சர்க்கரை, அரிசி வரட்டும்.. 1 கார்டுக்கு ரூ.10 ? புதுஸா இருக்கே.. தமிழக அரசு முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் கடைகளுக்கு அரிசி, சர்க்கரை கூடுதலாக கிடைக்க உள்ள நிலையில், புது கோரிக்கை ஒன்று தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

நம்முடைய நாட்டை பொறுத்தவரை, எந்த மாநிலத்தை சேர்ந்தவரும், எந்த இடங்களிலும் சென்று பொருட்களை வாங்கலாம் என்ற நோக்கத்துடன், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதுதான் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம். கடந்த 2020 அக்டோபரில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது..

Ration Card Holders in Tamil Nadu and Major requests for Ration Card Employees 1 card Rs10 Incentives

விரல்ரேகை: இதன் மூலம் தங்களது சொந்த மாநிலத்தை விட்டு பிற பகுதிகளில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் பகுதிகளிலேயே தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும்.. மேலும், நாடு முழுவதும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து ரேஷன் கடைகளிலும், இ-ஸ்கேல் என்று சொல்லப்படும் எலக்ட்ரானிக் பாய்ண்ட் ஆஃப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. எனவே, விரல் ரேகையை சரிபார்த்துதான் பொருட்கள் அனைத்துமே வழங்கப்பட்டு வருகின்றன..

அந்தவகையில், தமிழகத்திற்குள்ளும், எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்க ரேஷன்தாரர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைக்காக சொந்த ஊர்களை விட்டு, வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள பயனாளிகள் இந்த திட்டத்தினால், மிகப்பெரிய பலனை பெற்று வருகிறார்கள்.

அரிசி, சர்க்கரை: இந்நிலையில், புது கோரிக்கை ஒன்று எழுந்துள்ளது.. அதாவது, அரிசி, சர்க்கரை குறைவாக உள்ளதாம்.. இடம் பெயர்ந்த கார்டுதாரர்கள் பயன்பெறும் வகையில், எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளுக்கு கூடுதலாக அரிசி, சர்க்கரையை அனுப்புமாறு, தமிழக அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

ரேஷன் கடைகளுக்கு கூடுதல் பொருட்கள் அனுப்பாமல் உள்ளதால், அந்த கடையில் இடம்பெறாத மற்ற கார்டுதாரர்களும், பொருட்களை வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி இருப்பதால், கூடுதலாக அரிசி, சர்க்கரையை உடனடியாக அனுப்பும்படி, அரசுக்கு ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ஓரிரு நாளில் அரிசி, சர்க்கரை தமிழக ரேஷன் கடைகளுக்கு வந்துசேர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது.

அறிக்கை: இப்படிப்பட்ட சூழலில், அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.. இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.தினேஷ்குமார் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ''பெரும்பாலான ரேஷன் கடையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். ...எந்த கடையிலும் பொருட்கள் வாங்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கடையிலும், 200 - 300 கார்டுதாரர்கள் கூடுதலாக வந்து பொருட்களை வருகின்றனர். அதற்கேற்ப பொருட்களை கூடுதலாக அனுப்புவதில்லை.

ஊக்கத்தொகை: இதனால், கடையில் இணைக்கப்படாதவர்களுக்கு பொருட்கள் வழங்க முடிவதில்லை. எனவே, கூடுதல் பயனாளிகளுக்கு ஏற்ப, கூடுதலாக பொருட்களை அனுப்ப வேண்டும். இந்த பணிக்காக, ஊழியர்களுக்கு ஒரு கார்டுக்கு, மாதம், 10 ரூபாய் ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்ததற்காக ஏற்பட்ட கூடுதல் பணிக்காக 2,500 ரூபாய் வழங்குமாறு ரேஷன் கடை ஊழியர்கள் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்...

கரும்பு வாகனம்: அதாவது, கரும்பு எடுத்து வர வாகன வாடகை போன்றவற்றை ஊழியர்கள் தங்களது சொந்தச் செலவில் மேற்கொண்டதால் ரேஷன் ஊழியர்களுக்கு தினமும் தலா ரூ.500 என 5 நாட்களுக்கு 2,500 ரூபாய் செலவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக அரசும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு அட்டைக்கு 50 காசு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது..

கூடுதல் தொகை: கூடுதல் பணிச்சுமையை ஈடு செய்ய விற்பனையாளர், கட்டுநர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்திருந்தது.. அத்துடன், ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் இந்த ஊக்கத்தொகை வரவு வைக்கப்படும் என்று கூறியிருந்தது. அந்தவகையில், தற்போதும் ஒரு கார்டுக்கு, மாதம், 10 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+