சர்க்கரை அட்டைதாரர்களுக்கு நியூஸ் வருதா? அரிசி விலை வேற சர்னு ஏறிடுச்சே.. அடுத்து இதான் நடக்க போகுது
சென்னை: சென்னை ஓட்டல்களில், இட்லி, தோசை விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு அரிசியின் விலை சென்னை உட்பட தமிழகத்தில் எகிறி உள்ளது.. இதற்கு என்ன காரணம்?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காய்கறிகளின் விலை உயர்ந்து வருகிறது.. முதலில் தக்காளி, அடுத்து, சின்ன வெங்காயம், பிறகு பூண்டு என விலைகள் உயர்ந்தன.. மற்றொருபக்கம் அரிசி, பருப்புகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

அரிசியை பொறுத்தவரை, கடந்த 6 மாதங்களாகவே விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்தியாவசிய உணவு பொருட்கள் ஜிஎஸ்டி வரம்பில் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரிசி விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது.. சென்னையில் மட்டும் 25 கிலோ அரிசி மூட்டையின் விலை ரூ.100 அதிகரித்தது.
சொதப்பல்: சொதப்பிய பருவமழை, குறைவான விளைச்சல், டிசம்பலர் மாதம் மிக்ஜாம் புயல், அறுவடை சமயத்தில் பலமான காற்று, போன்ற காரணங்களால் விளைச்சல் குறைவாகி, நெல் விலையும் அதிகமாகவே உயர்ந்துவிட்டது. இன்னும் 3 மாத காலத்துக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என்று வியாபாரிகள் ஜனவரி மாதமே சொன்னார்கள்.
போதிய மழை பெய்யாததால், தண்ணீர் இல்லாத நிலையில் அக்டோபர் மாதமே மேட்டூர் அணையும் மூடப்பட்டது. அதனால், கையிலிருந்த தண்ணீரை வைத்து குறுவை அறுவடையை விவசாயிகள் முடித்தனர்..
சம்பா பயிர்கள்: சம்பா சாகுபடிக்கு மழை கைகொடுக்கும் என நம்பி விவசாயிகள் சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால் போதிய மழையும் கிடைக்கவில்லை. மேலும், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் ஓரிரு நாட்கள் பெய்த மழைக்கே, வயலில் தண்ணீர் தேங்கி பாதிப்பை தந்துவிட்டது. இவையெல்லாம் சேர்ந்தே தமிழகத்தில், அரிசி விலை உயர்வுக்கு காரணமாகிவிட்டது.
புழுங்கல் அரிசி: சென்னையில் ஏற்கெனவே மொத்த விலையில் கிலோ ரூ.60-க்கு விற்ற புழுங்கல் அரிசி, இப்போது கிலோ ரூ.68 ஆக உயர்ந்துவிட்டது.. ரூ.60-க்கு விற்ற வேகவைத்த அரிசி ரூ.70 ஆக உயர்ந்து விட்டது..
பாஸ்மதி அரிசி கிலோ ரூ.120-க்கு விற்கப்படுகிறது. பழுப்பு அரிசி ரூ.39-க்கு விற்கப்படுகிறது. ரூ.37-க்கு விற்ற இட்லி அரிசி ரூ.40 ஆக உயர்ந்துவிட்டது.. பிராண்டட் அரிசி கிலோவுக்கு ரூ.10 வரை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் சில்லறை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.15 முதல் ரூ.17 வரை உயர்ந்துள்ளது.
ஓட்டல்கள்: இப்படி தொடர்ந்து அரிசி விலை உயர்ந்து வருவதால், இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.. அதைவிட முக்கியமாக, சென்னையில் ஓட்டல்களில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவுகளின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாம்..!!!
அதுமட்டுமல்ல, கடந்த மாதம், தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு எதுவும் வராது என்றும், வழக்கம் போல ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விநியோகம் வழங்கப்படும் என்றும், போதிய அளவில் அரிசி இருப்பு உள்ளது என்றும் உறுதி தந்திருந்தது. தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதலை தந்திருந்தது. ஆனால், இப்போது அரிசி விலை உயர்ந்தபடியே உள்ளதால், ரேஷனில் அரிசி தட்டுப்பாடு வருமா? என்ற கவலை மீண்டும் சூழ்ந்துள்ளது.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications