ரேஷன் அட்டை வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்.. தமிழ்நாடு அரசு மாஸ்.. ஸ்பெஷல் ஏற்பாடு.. ஆஹா, நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கார்டுதார்களுக்கு முக்கியதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சென்னையில், குறைதீர் முகாம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

Ration Card Holders: tamilnadu government pds special camp for ration card holders today in chennai

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் அரிசி: ஆனால், ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது.. எனவேதான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது... அதேபோல, குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், அரிசி ஆலைகளில் திடீர் சோதனைகளை அவ்வப்போது மேற்கொண்டும், பரிசோதித்தும் வருகிறார்கள்.

இதனிடையே, பொதுமக்களின் குறைகள் தீர்க்க மற்றுமொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.. ரேஷன் அட்டைதார்கள், https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று உரிய விவரங்களை அளித்து கட்டணம் செலுத்தி, குடும்ப அட்டைகளை பெற முடியும்... இதையடுத்து குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள மக்கள் குறைதீர் முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் சென்னை மண்டலத்தில், இன்றைய தினம் குறைதீர் முகாம் நடந்தது.. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் இதற்கான அறிவிப்பினை ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இன்று முகாம்: இந்நிலையில், ஜுன் 2023 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் வரும் இன்று காலை முதல் மதியம் வரை நடைபெற்றது.

நியாய விலைக் கடைகளில் பொருட்களை பெற நேரில் வருகை தர முடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும் என்றும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்ததால், சென்னையிலுள்ள ரேஷன் அட்டைதாரர்கள் இந்த முகாமை சரியாக பயன்படுத்தி கொண்டனர்.

பெருத்த நம்பிக்கை: முகாமில் தெரிவிக்கப்பட்ட குறைகள், விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தரப்பட்டுள்ளது.

தற்போது சென்னை மாவட்டத்தில் குறைதீர் முகாம் நடந்து முடிந்துள்ள நிலையில், இந்த சேவை அடுத்தடுத்து அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக நடத்தப்படும் என்றும், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.. இதன்மூலம் அந்தந்த மாவட்ட மக்கள் பலன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+