ரேஷன் + இபி + மெட்ரோ.. ஸ்டாலின் எடுத்த அதிரடி ரூட்.. மொத்தமாக எல்லாமே மாறுதே.. கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமாக சேவைகள் பல டிஜிட்டல் மயமாகி வருகிறது. மக்களுக்கு வழங்கப்படும் அடிப்படை சேவைகள் பல டிஜிட்டல் மயமாகிக்கொண்டு இருக்கிறது. அந்த வகையில் 3 முக்கியமான துறைகளில் சேவைகள் டிஜிட்டல் மயமாகி உள்ளன.
சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் இதே போல ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.
ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது.
பண மோசடி, லஞ்சம் போன்றவை இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.

மின்சார கட்டணம்: இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.
இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.
மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.
ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

மெட்ரோ : இதையடுத்து தற்போது மெட்ரோவில் புதிய டிஜிட்டல் புரட்சி ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி
மெட்ரோவில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. இதை ஒரு நாள் முழுக்க ஒரு முறை பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கு வழங்க முடியும்.
பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் கூட வரும் காலங்களில் இந்த டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.
இப்படி மக்கள் பயன்படுத்தும் முக்கியமான துறைகளில் அதிரடியாக டிஜிட்டல் மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்பை பெற்றுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications