ரேஷனிலிருந்து வீடு தேடி வரும் பொருள்..விஜயகாந்த் வர்றாரு.. விருகம்பாக்கத்தை அதிரவைத்த விஜய பிரபாகரன்
சென்னை: விருகம்பாக்கம் தொகுதியில் மீண்டும் தேமுதிக வெற்றிபெறும் என்று அக்கட்சியின் விஜய பிரபாகரன் உறுதிபட தெரிவித்திருக்கிறார்.
எம்பி தேர்தல் நெருங்கி வருகிறது.. இதுவரை தேமுதிக கூட்டணி குறித்த தகவல் முடிவாகவில்லை... யாருடன் கூட்டணி என்பது குறித்து உறுதியான தகவலும் வரவில்லை.. ஆனால், தொகுதிகளில் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளதாக தெரிகிறது..
கூட்டணி: அத்துடன் விஜயபிரபாகரன் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரடியாகவே சென்று, மாவட்ட தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறாராம்.. இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் சிலரை நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்கள் நம்மிடம் சொன்னதாவது:
"கட்சிக்குள் தொய்வை சரிப்படுத்தும் வேலையில் விஜயபிரபாகரன் மும்முரமாகி இருக்கிறார்.. விஜய பிரபாகரனின் பக்குவமும், முதிர்ச்சி அரசியலும் கூடியுள்ளதும் கட்சிக்கு தெம்பை தந்து கொண்டிருக்கிறது.. "அடுத்த அவதாரம் ரெடி" என்ற என்பதாகவே நாங்கள் அவரை பார்க்கிறோம்.. ஆனால், கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.. விரைவில் மா.செ. கூட்டத்தை நடத்த போகிறோம்.. அப்போதுதான், கட்சி மேலிடம் இதுகுறித்த ஆலோசனையில் ஈடுபடுவார்கள்" என்றனர்.

யாருடன் கூட்டணி: எனினும், பாஜகவை இப்போதுவரை விட்டுக்கொடுக்காமலும், அதேசமயம், திமுகவை கடுமையாக தாக்கியும், தேமுதிக மேலிடத்தின், சமீபகால பேச்சுக்களும், பேட்டிகள் அமைந்துவருவதும் கவனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில், விஜயபிரபாகரனின் பேச்சு ஒன்று இணையத்தில் ஷேர்ஆகி வருகிறது.. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தேமுதிக தொழிற்சங்க 18ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் விஜயபிரபாகரன் பேசும்போது, "ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும் என்று, 18 வருடங்களுக்கு முன்பே தொலைநோக்கு பார்வையுடன் சொன்னவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த்... உடனே, அது எப்படி வரும்? என்று எல்லாரு கேட்டார்கள்... ஆனால், இன்றைக்கு எல்லாமே சாத்தியமாகி உள்ளது..
கேப்டன் விஜயகாந்த்: ஆன்லைனில் பொருட்கள் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படுகிறது. பஞ்சாப், ஆந்திரா, டெல்லியில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே சென்று வழங்கப்படுகிறது.. இதைதானே கேப்டன் அன்னைக்கே சொன்னாரு..
டெல்லியில் 20 வருடங்களுக்கு முன்பே மெட்ரோ ரயில் வந்துள்ளது. சென்னையில் இப்போதுதான் அதுக்கு வேலை நடக்கிறது.. தொலைநோக்கு பார்வை உடையவர் கேப்டன்.. இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளவர்கள் அனைவரும், தேமுதிகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தினை செய்ய வேண்டும்.. மறுபடியும் விருகம்பாக்கம் தொகுதியில், தேமுதிக வெற்றிப்பெற வேண்டும்... முரசு சப்தம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.. அதற்கு கேப்டனின் தொண்டர்கள்தான் உதவ வேண்டும்" என்று விஜயபிரபாகரன் கேட்டுக் கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications