ரேஷன் அட்டைதாரர்களே.. மேஜர் தகவல் வந்தாச்சு.. இதை உடனே முடிச்சிடுங்க.. ஆதார் அட்டை + ரேஷன் அட்டை
சென்னை: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.. இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ரேஷன் கார்டுகள் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகிறது.. ஆனாலும், 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது... இதன்மூலம் மேலும் பல நன்மைகளை பெற முடியும்.

ரேஷன் கார்டின் (Ration Card) கீழ், உணவு தானியங்களுடன் பல நன்மைகள் உள்ளன. இதில், ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்து, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' (One Nation One Ration) திட்டத்தில் பயன்பெறலாம். இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு கடையிலும் ரேஷன் பெறலாம்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
ஆஃப்லைனிலும் இணைக்கலாம்
ரேஷன் அட்டைகள்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் மையத்தில் செய்யப்படலாம்.
இந்நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், தற்போது வரைக்கும் பல ரேஷன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்நிலையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட மாட்டாது எனவும், ரேஷன் கார்டு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நீட்டிப்பு: அந்தவகையில், தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களின் ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டு உடன் இணைத்திடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்னொரு அதிரடியையும் இன்றைய தினம் தமிழக அரசு செய்திருந்தது.. ஒரு குடும்பத்தில் உறுப்பினர் இணைந்தால் ரேஷன் கார்டுகளில் அவரின் பெயரை சேர்ப்பதும், யாராவது இறந்துவிட்டால் அவரது பெயரை நீக்குவதும் கட்டாயம் ஆகும்.. அந்த வகையில், சென்னையில் இதற்கான முகாம் இன்று நடத்தப்பட்டுள்ளது..
அதன்படி, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவுகளுக்காக முகாம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றங்களை செய்ய சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலகங்களில், இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெற்றது.. ரேஷன் கார்டுகளில் திருத்தம் இருந்தால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.. அதன்படியே, காலை முதல் மதியம் வரை நடந்த முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
-
வேலுமணி ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா! எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications