ரேஷனில் அரிசி, கோதுமை நிறுத்தமா.. காரணம் என்ன.. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
சென்னை: ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.. இதற்கான காரணத்தையும் அரசு வெளியிட்டுள்ளதுடன், பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய வகையில், காலக்கெடு ஒன்றையும் நீட்டித்துள்ளது.
வாட்ஸ்அப் மூலமாகவே ஆதார் கார்டு, பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதற்கான வழிமுறைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஆவணங்கள் என்றாலே அதை நாம் எந்நேரமும் பத்திரப்படுத்த வேண்டியதாயிருக்கிறது.. எங்கே செல்வதானாலும், அவைகளை பாதுகாப்புடன் கொண்டு சென்று, வீடு திரும்ப வேண்டுவது அவசியமாகிறது..
ஆதார் அட்டைகள்: அடையாள அட்டைகளை கூட பாக்கெட்டில் எடுத்து செல்ல வேண்டியிருந்தது... ஆனால், தொழில்நுட்பம் வளர்ந்த பிறகு மத்திய, மாநில அரசுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன... முக்கிய ஆவணங்களை சாஃப்ட் காப்பி வடிவில் செல்போனிலேயே வைத்துக்கொள்ள முடியும்.
அதாவது, ஆவணங்களை, டிஜிட்டல் வடிவத்தில் இருப்பதை அரசே அனுமதி அளிக்கிறது... ஆனால் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட வடிவத்திலும் அவைகள் இருக்க வேண்டும்... ஆதார் அட்டை , பான் கார்டு , டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை இப்போது ஸ்மார்ட்போனிலேயே பதிவிறக்கம் செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மேலும், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு கார்களை பெறும் முறைகளையும் எளிமையாக்கியுள்ளது மத்தியஅரசு.
மோசடிகள்: அந்த அளவுக்கு ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனின் முக்கிய அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல, இந்த ஆதார் அட்டையை வைத்து, நாட்டில் பல்வேறு மோசடிகளும் நடந்து வருகின்றன.. அதனால், இந்த மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு ஆதார் கார்டுடன் பான் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு என அனைத்து முக்கிய ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும் என்று அவ்வப்போது அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க பல மாதங்களாகவே கால அவகாசம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் பலரும் இணைக்காமலேயே உள்ளனர்.
ஆதார் அட்டை: அப்படி இணைக்காத பொதுமக்களின் ரேஷன் கார்டுகளுக்கு ரேஷன் பொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்போது, ரேஷன் கார்டுடன் ஆதார் அணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தங்களுடைய ரேஷன் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த கூடுதல் அவகாசத்திலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இணைக்காதவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.
ரேஷன் கார்டின் (Ration Card) கீழ், உணவு தானியங்களுடன் பல நன்மைகள் உள்ளன. இதில், ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைத்து, 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' (One Nation One Ration) திட்டத்தில் பயன்பெறலாம். இதன் மூலம், நாட்டின் எந்த மாநிலத்தின் ரேஷன் கார்டு கடையிலும் ரேஷன் பெறலாம்.
ஆதார் அட்டையை ஆன்லைனில் எப்படி இணைப்பது
1. இதற்கு முதலில் uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
2. இப்போது நீங்கள் 'Start Now' என்பதைக் கிளிக் செய்க.
3. இப்போது இங்கே உங்கள் முகவரியை மாவட்ட மாநிலத்துடன் நிரப்ப வேண்டும்.
4. இதற்குப் பிறகு 'Ration Card Benefit' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.
5. இப்போது இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை நிரப்பவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
7. இங்கே OTP ஐ நிரப்பிய பிறகு, உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை அனைத்தும் முடிந்தவுடன், உங்கள் ஆதார் சரிபார்க்கப்பட்டு, உங்கள் ரேஷன் கார்டுடன் உங்கள் ஆதார் இணைக்கப்படும்.
ஆஃப்லைனிலும் இணைக்கலாம்
ரேஷன் அட்டைகள்: ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் மையத்தில் செய்யப்படலாம்.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications