குடும்ப அட்டைதாரர்களே.. ரேஷன் கடையில் இனி "இந்த பொருள்" கிடையாது.. தமிழக அரசு புது உத்தரவு.. நிம்மதி
சென்னை: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வரும்நிலையில், இனி கூடுதலாக மற்றொரு பொருளையும் ரேஷனில் வினியோகிக்க முடிவு செய்துள்ளதாம்.
விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது..

ஆனால், அது குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகாமல் உள்ளதால், பொதுமக்களிடம் ஆர்வம் கூடிவருகிறது. இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.
ரேஷன்தாரர்கள்: எனினும், பண்டிகை காலம் என்பதல், இந்த பொருட்களின் தேவை அதிகரித்துவிடும்.. அதனால்தான், இந்த நவம்பர் மாதத்தில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறதாம்.
ஏற்கனவே, இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், இந்த பண்டிகை காலங்களுக்கு தேவைப்படும் வகையில், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யவிருப்பதாக சொன்னார்கள். மேலும், தமிழகத்துக்கு 8500 டன் கோதுமையை வழங்க மத்திய அரசு ஒப்புதலையும் வழங்கியிருந்ததையு இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
ரேஷன் கடைகள்: மேலும், நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை என்பதால், வரும் 5ம் தேதி வழக்கம்போல் ரேஷன் கடைகள் இயங்கும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இதனால், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவுக்கு இருப்பு வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், ரேஷன் கடைக்ளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதாவது, கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ் மளிகை, சமையல் எண்ணெய், மாவு வகைகள் போன்றவை, விரைவில் விற்பனையாக கூடிய நுகர்வோர் பொருட்கள் விற்கப்படுகின்றன.. குறிப்பாக, பல்வேறு கூட்டுறவு சங்கங்கள், மஞ்சள், மசாலா பொருட்கள், மாவு வகைகள், சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய், தேன் இப்படி பல பொருட்களை விற்பனை செய்கின்றன.
பெயர் தெரியாத நிறுவனம்: ஆனால், இவையெல்லாம் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்படுகின்றன.. எனினும், இதில், பல தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்கள், மக்களுக்கு தெரிவதேயில்லையாம். அந்த பொருட்களும் தரமற்று இருப்பதால் சொல்கிறார்கள்.. இதனாலேயே நிறைய பேர் இந்த பொருட்களை வாங்குவதில்லை..
அப்படியே வாங்காமல் சென்றாலும், அந்த பொருட்களை வாங்கி கொள்ளுமாறு ரேஷன் ஊழியர்களுக்கு, அதிகாரிகள் நெருக்கடி தருகிறார்களாம்.. இதற்குதான் கூட்டுறவுத்துறை ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. ரேஷன் கடைகளில், பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது என்று கூட்டுறவு சங்கங்களின் அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....
புது உத்தரவு: ஒருவேளை, தனியாரிடம் வாங்க நேர்ந்தாலும், மக்களிடம் பிரபலமாக உள்ள நிறுவனங்களின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும், பெயர் தெரியாத நிறுவனங்களின் பொருட்களை விற்க கூடாது என்றும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவானது, அரிசி அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications