Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குவியும் அரிசி, பருப்பு.. தீபாவளிக்காக ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு.. மக்கள் ஏக குஷி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளியை முன்னிட்டு 2.64 இலட்சம் மெ.டன் அத்தியாவசியப் பொருள்கள் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் 36,578 நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல் வெளியிட்டு உள்ளார்.

உணவு மற்றும் உணவுபொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி 07.11.2023 சென்னை இந்திரா நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் அமுதம் பல்பொருள் சிறப்பங்காடியில் வெளிச்சந்தை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 1 கிலோ வெங்காயம் ரூ.30 என்ற விலையில் விற்கப்படுவதை ஆய்வு செய்து வாடிக்கையாளர்களிடம் கலந்துரையாடினார்கள். அமுதம் மக்கள் அங்காடி மூலம் சென்னையில் 10 அங்காடிகளில் வெங்காயம் மலிவு விலையில் விற்கப்பட்டு வருகிறது.

Ration Shops to get ton amount of Rice, Sugar and Atta ahead of Diwali in Tamil Nadu

தமிழ்நாட்டில் பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமோலின் ஆயில் ஆகியன தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக கொள்முதல் செய்து 355 கிடங்குகளில் இருப்பில் வைத்து 36,578 நியாய விலை அங்காடிகளின் மூலம் 2,23,86,333 குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலை அங்காடிகளுக்கு 2.28,191 மெ.டன் அரிசி, 19,170 மெ.டன் சர்க்கரை, 5.321 மெ.டன் கோதுமை. 10.972 மெ.டன் துவரம் பருப்பு, 1 கோடியே 12 இலட்சம் பாமோலின் பாக்கெட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பொருள்கள் இரண்டு நாள்களில் அனுப்பி முடித்து வைக்கப்படும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு. பாமாயில் ஆகியவை ஒதுக்கீட்டின்படி கிடங்கில் இருந்து நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்யப்பட்டிருப்பதையும், அங்காடிகளில் போதுமான அளவு இருப்பு வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல தரத்துடன் சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், சென்னை தரமணியில் உள்ள அமுதம் நியாயவிலை அங்காடிகளில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.

இந்த ஆய்வின் போது, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால், இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ஆ. அண்ணாதுரை, இ.ஆ.ப., மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அடுத்தடுத்து அறிவிப்பு: நேற்றுதான் தீபாவளியை முன்னிட்டு கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2022-2023 ஆண்டுக்கான மிகை ஊதியம் (Bonus) மற்றும் கருணைத் தொகை (Ex-gratia) 2023-2024-இல் வழங்க மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். போனஸ் சட்டத்தின் கீழ் வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சென்ற ஆண்டைப் போலவே அவர்களுடைய சம்பளத்தில் 10 சதவீதம் போனஸ் (போனஸ் மற்றும் கருணைத் தொகை) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

போனஸ் சட்டத்தின் கீழ் வராத, தலைமைச் சங்கங்கள் மற்றும் மத்திய சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.3000/-ம், தொடக்க சங்கங்களின் பணியாளர்களுக்கு ரூ.2,400/-ம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கருணைத் தொகையாக வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள தலைமை கூட்டுறவுச் சங்கங்கள், மத்திய கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் 44,270 பணியாளர்களுக்கு ரூ. 28 கோடியே ஒரு இலட்சம் போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+