ரேஷன் கடைகளுக்கு போன பளீர் உத்தரவு.. ரூ.1000 உரிமை தொகை திட்டத்திற்கு இடையே.. மேஜர் அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்ட முகாம்கள் நடந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுக்க இதற்கான முகாம்களை முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் முகாம்களில் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. முகாம்களில் பின்வரும் சம்பவங்கள் நடக்கின்றன.
குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கான பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் ஒரு வாரமாக வீடு வீடாக வழங்கப்படுகின்றன. அதேபோல் இதற்கான டோக்கனும் கடந்த ஒரு வாரமாக வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இதற்கான முகாம்கள் தொடங்கி உள்ளன.

இந்த டோக்கனில் நீங்கள் ரேஷன் கடைக்கு அல்லது முகாமிற்கு எந்த நாளில், எந்த நேரம் செல்ல வேண்டும் என்று நேரம் கொடுக்கப்பட்டு இருக்கும். எந்த முகாமிற்கு செல்ல வேண்டும் என்றும் விவரங்கள் இருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அந்த முகாமிற்கு குறிப்பிட்ட தேதியில் டோக்கனுடன் செல்ல வேண்டும்.உடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை எடுத்து செல்ல வேண்டும்.
எல்லா மாவட்டங்களும் கிட்டதட்ட 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கூட்டங்களை சமாளிக்க முடிகிறது. முகாம்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகவே கல்லூரி, பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடி ஆய்வு செய்து வருகின்றனர். முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது. இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது.
பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சர்வே டவுன் ஆக உள்ள பட்சத்தில் ஆப் லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. ஏற்கனவே விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர். அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு வந்து ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை.
ரேஷன் கடை ஊழியர்கள்தான் இந்த முகாம்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகையான மகளிருக்கான ரூ. 1000 வழங்கும் திட்ட முகாம்கள் நடந்து வரும் நிலையில் ரேஷன் கடைகளுக்கு முக்கியமான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக அடுத்த மாதம் 26 ஆம் தேதி சனிக்கிழமை விடுமுறை என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப முகாம்கள் நடைபெறும் நிலையில் முகாம்களை சரியாக நடத்துவதற்கு வசதியாக வரும் ஞாயிறு அன்று (ஜூலை 30) அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித்












Click it and Unblock the Notifications