ஆர்த்தியும் அவர் குடும்பமும் என் பணத்தில் சொகுசு வாழ்க்கை! நான் பொன்முட்டையிடும் வாத்து! ரவி மோகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை ஆர்த்தி கணவனாக நினைத்ததே இல்லை. ஒரு பொன் முட்டையிடும் வாத்தாகவே நினைத்தார் என ரவி மோகன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ரவி மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: நான் எனது குடும்பத்தினரிடம், நெருங்கிய நண்பர்களிடம் மற்றும் என்னை உண்மையாக நேசிக்கும் ரசிகர்களிடம் விவாகரத்து கோருவதற்கு முடிவு செய்ததை ஏற்கெனவே பகிர்ந்திருந்தேன்.

ravi mohan chennai

இந்த முடிவை எனது முன்னாள் மனைவி உள்பட அனைவரின் தனியுரிமையை பாதுகாக்கும் விருப்பத்துடன் எடுத்தேன். மேலும் இந்த விஷயத்தில் எனது மவுனம் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

பொது வெளியில்

பொது வெளியில் நான் தோன்றுவதன் அடிப்படையில் எனது குணத்தை மட்டுமல்ல, கேள்விக்குள்ளாக்கும் பொய்யான குற்றச்சாட்டுகளால் நான் பொது வெளியில் அவதூறுக்குள்ளாகிறேன். இந்த கட்டுக்கதைகளை நான் மறுக்கிறேன். நான் எப்போதும் செய்தது போல கண்ணியத்துடன், உறுதியுடன், மற்றும் நீதியின் மீது நம்பிக்கையுடன் என் உண்மையில் நிற்பேன் என குறிப்பிட்டிருக்கிறேன்.

சூழல்கள்

எனது சூழ்நிலைகளை முழுமையாக அறிந்து எனது முன்னாள் மனைவியுடனான திருமண வாழ்விலிருந்து விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் எனது குழந்தைகளை விட்டு நான் விலக மாட்டேன். எனது குழந்தைகள் எனது நிரந்தர பெருமையும் மகிழ்ச்சியும் ஆவர். எனது மகன்களுக்காக எல்லாவற்றையும் நான் செய்வேன்.

பண ஆதாயம்

எனது குழந்தைகள் பண ஆதாயத்திற்காகவும் பொது அனுதாபத்தை பெறவும் பயன்படுத்துவதை பார்க்கும் போது எனக்கு வேதனையாக இருக்கிறது. எனது குழந்தைகள் ஒரு கார் விபத்தில் சிக்கியது ஒரு மாதத்திற்கு பிறகு யாரோ ஒருவர் சொல்லி எனக்கு தெரியவந்தது.

பழுதுபார்ப்பதற்கு

காரை பழுதுபார்ப்பதற்கு காப்பீட்டிற்காக எனது கையொப்பம் தேவைப்பட்ட போது மட்டுமே அந்த விஷயம் எனக்கு தெரியவந்தது. அப்போதும் அவர்களை பார்க்க நான் அனுமதிக்கப்படவில்லை. எனது முன்னாள் மனைவியையும் குடும்பத்தையும் என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து நான் நேசித்தேன்.

கெனிஷா தோழி

கெனிஷா ஆரம்பத்தில் எனது தோழி. கண்ணீரும் ரத்தமுமாக இருந்த சூழலில் உயிர்நாடியாக எனக்கு இருந்தவர் கெனிஷா. ஒரு நாள் இரவு நான் வெறுங்காலுடனும் நைட் டிரஸ்ஸுடனும் என் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போது அவர்தான் எனக்கு உதவினார்.

ஒளியாக இருந்த கெனிஷா

எனது பர்ஸ், வாகன ஆவணங்கள் என எதையும் எடுக்கவிடாமல் துரத்தினார்கள். எனக்கு ஒளியாக இருந்தார். அவர் எனக்கு துணை. நான் சட்ட ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும், பொருளாதார ரீதியாகவும் போராடிய போது கெனிஷாதான் உடன் இருந்தார்.

நல்ல பாடகி

கெனிஷா ஒரு தெரபிஸ்ட். அவர் நல்ல பாடகியும் கூட!, என் கஷ்டங்களை அறிந்த அவர் எனக்கு தோழியாக உதவி செய்வதாக கூறினார். இத்தனை நாட்களாக முதுகில் குத்தப்பட்டேன். இப்போது நெஞ்சில் குத்தப்பட்டிருக்கிறேன். குழந்தைகளை பார்க்க விடாமல் பவுன்சர்கள் கொண்டு தடுக்கிறார்கள்.

வருமானம்

5 ஆண்டுகளாக எனது வருமானம் அனைத்தையும் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினர் மட்டுமே அனுபவித்து வந்தனர். என்னை கணவராக அல்லாமல் பொன் முட்டையிடம் வாத்தாக ஆர்த்தியின் குடும்பம் பயன்படுத்தியது. இத்தனை நாட்களாக அமைதியாகவும் பொறுமையாகவும் இருந்தேன். எனது அமைதிக்கும் எல்லை உண்டு. உண்மையோ இரக்கமோ இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்க்கை கிசுகிசுவாக மாறியது அதிர்ச்சி அளிக்கிறது.

மவுனம் பலவீனம் அல்ல

என் மௌனம் பலவீனம் அல்ல. எனது நேர்மையை கேள்விக்குள்ளாக்கினால் பேச வேண்டும். சட்டத்தை முழுமையாக நம்பியுள்ளேன். அது உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். தந்தையாக என்னை கேள்விக்குள்ளாக்கும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். ஒரு தந்தையாக எனது குழந்தைகளை பார்க்க சரியாக அனுமதிக்கப்படவில்லை.

கடைசி அறிக்கை

இதுவே எனது கடைசி அறிக்கை. அவர்கள் இன்னும் அதிக அழிவுக்கு ஆளாக நேரும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இவ்வாறு ரவி மோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நான் எப்போது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேனோ அப்போதே அவர் எனது முன்னாள் மனைவி என்பதை என் மனதில் நிறுத்திக் கொண்டேன். ஆர்த்தி எனது முன்னாள் மனைவி என்றே என் கடைசி மூச்சு வரை என் மனதில் இருக்கும்.

என் பெற்றோர்

கடந்த 5 ஆண்டுகளாக நான் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் ஆர்த்தியும் அவரது குடும்பத்தினருமே அனுபவித்தனர். என் பெற்றோர் ஒரு ரூபாய் கூட அனுபவித்ததில்லை என்றும் ரவி மோகன் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+