கையை அறுத்து மிரட்டிய ஆர்த்தி! நான் உயிரோட இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கலை! ரவிமோகன் பகீர்
சென்னை: கையை கிழித்துக் கொண்டு பிளாக் மெயில் செய்துதான் ஆர்த்தி, என்னை திருமணம் செய்து கொண்டார் என ரவி மோகன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் தான் சம்பாதித்த பணத்தில் மாதம் ரூ 25 ஆயிரத்தில் மருந்து வாங்க ஆர்த்தியின் தாய் குடும்பத்திற்கு கொடுத்ததாகவும் ரவி தெரிவித்தார்.
இதுகுறித்து ரவி மோகன் கூறியிருப்பதாவது: ஒருத்தரோட வாழ்க்கையிலும் இமேஜிலும் விளையாடாதீர்கள். என்ன நடந்தது என உங்களுக்கு (நெட்டிசன்கள்) என்ன தெரியும். போய் 2 நாள் இருந்து பாருங்கள். இருக்க முடியுமா, இருந்தவர்களுக்குத்தானே தெரியும்.

அப்படியிருக்கும் போது சைபர் புல்லிங் செய்வோரே உங்களால் எத்தனை பேர் செத்து போயிருக்கிறார்கள் தெரியுமா? உங்களை போன்றோர்களால், குழந்தைகள், டீன் ஏஜ் பசங்க எல்லாம் செத்து கொண்டிருக்கிறார்கள். ஆர்த்தியை பற்றி நிறைய பேர் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.
நான்தான் நம்பவில்லை. ஆர்த்தி அவருடைய கையை அறுத்துக் கொண்டுதான் என்னை திருமணம் செய்தார். என்னோட பிளாக் மெயில் மேரேஜ். திருமண போட்டோக்களை பாருங்கள். இன்று என் கையையும் அறுக்க வைத்துவிட்டார்.
கடந்த 2 வருஷமாக நான் நிம்மதியாக இருந்தேன். யார் காசு கொடுத்தாலும் வாங்க சொல்வார்கள், ஆர்த்தி அம்மாவின் தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படத்தில் நடிக்கும் போதே அடுத்த படத்திற்கு கையெழுத்து வாங்குவார்கள். நான் மற்ற நிறுவனத்தில் படம் செய்யக் கூடாது.
நான் விஸ்காம் படித்தது, திரைப்பட விழாக்களில் பார்த்த அறிவை வைத்து நான் எதையும் செய்து கொள்ளக் கூடாது. நான் காசுக்காகவும் சில படங்களை செய்திருக்கிறேன், அதே நேரம் ரிஸ்கும் எடுத்திருக்கிறேன். நான் அப்படி ரிஸ்க் எடுத்த படங்கள் ஓடுமா ஓடாதா என தெரியாது. ஆனாலும் எனது ரசிகர்களுக்காக மெனக்கெட்டு அந்த படங்களை எடுத்தேன்.
ரசிகர்களை மகிழ்விப்பதுதான் எனக்கு தெரியும். ஏனென்றால் இது நீங்கள் போட்ட பிச்சை, நீங்கள் போட்ட சாப்பாடு. நான் ஏன் சைபர் புல்லிங் செய்வோருக்கு பிச்சை போடணும்! அவங்க பாலோயர்களை நான் ஏன் டெவலப் செய்யணும்!
ஆணும் இல்லாத பெண்ணும் இல்லாதவர்களை சிவனோட குழந்தை என நான் சொல்வேன். அவர்கள் பாலோயர்களை அதிகரிக்க என்னை பற்றி தப்பு தப்பாக பேசி வீடியோ போடுகிறார்கள். ஒரு பொண்ணு என்னை புரிந்து கொண்டிருந்தது. அதையும் துரத்தி விட்டீர்கள். கெனிஷா என்ற டாப்பிக் வரும் போதெல்லாம் நான் இங்குதானே இருந்தேன். எங்கேயும் ஓடிவிடவில்லையே!
நான் இருக்கும் வீட்டை அழகாக அலங்கரித்தார் கெனிஷா, மற்றவர்களை போல் இன்னொருத்தர் காசில் சொகுசாக கெனிஷா இருந்ததில்லை. இதை கெனிஷாவுக்காக நான் பேசவில்லை. அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்.
நான் உயிருடன் இருக்கக் கூடாது என நினைக்கிறார்கள் (ஆர்த்தி குடும்பம்). விரைவில் அவர்கள் எதிர்பார்ப்பது நடக்கும். எனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கு கூட இல்லை. சம்பாதித்த பணத்தைக் கூட என்னால் சுதந்திரமாக செலவு செய்ய விடவில்லை, அவர்களுக்கு மெசேஜ் போகும், உடனே ஏன் செலவு, எதுக்கு செலவு என கேட்க தொடங்கிவிடுவார்கள். நான் சம்பாதிக்கும் காசில் ஆர்த்தியின் தாய் குடும்பத்திற்கு மருந்துக்காக மாதம் ரூ 25 ஆயிரம் கொடுத்தேன்.
நான் கோடீஸ்வரன் என்கிறார்கள். நான் ஓட்டு வீட்டில்தான் பிறந்தேன். என் தந்தை கஷ்டப்பட்டு வேலை பார்த்து வாழ்க்கையில் முன்னேறினார். குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்ட அவர்களால் முடியாது, ஆனால் டூர் போக மட்டும் தெரியும் என ரவி மோகன் கடுமையாக விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications