நம்ம குழந்தை.. மகாலட்சுமியிடம் சொன்ன ரவீந்தர்! “செமயா வாழ்வோம்” - மீம்ஸ், ஹேட்டர்களுக்கு பதிலடி
சென்னை: தன்னுடைய உருவத்தையும், 2 வது முறையாக திருமணம் செய்துகொண்டதையும் வைத்து கண்டதையெல்லாம் இணையதளத்தில் எழுதி வருவதாக தயாரிப்பாளர் ரவீந்தர் தெரிவித்து இருக்கிறார்.
சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கும், லிப்ரா புரொடெக்சன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருப்பதி கோயிலில் திருமணம் நடைபெற்றது.
மகாலட்சுமி சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாகவும், சினிமா, சின்னத்திரை விவகாரங்கள் தொடர்பாகவும் பேட்டி கொடுத்து பிரபலமானார்.

எல்லைமீறிய நெட்டிசன்கள்
இவருக்கும் திருமணம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் எங்கும் ஆக்கிரமித்து உள்ளன. ஆனால், திருமணம் செய்த இவர்களுக்கு வாழ்த்து சொல்பவர்களைவிட இருவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், இருவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது குறித்தும், ரவீந்தரின் உடல் தோற்றும் குறித்து தவறான கருத்துக்களையும் மீம்களையும் பதிவிடுபவர்களே அதிகம்.

ரவீந்தர் பேட்டி
இந்த நிலையில் தனது மனைவி மகாலட்சுமியுடன் ரவீந்தர் பேட்டியளித்து இருக்கிறார். அதில், "நாட்டு ரொம்ப முக்கியம் எங்க கல்யாணம். எல்லா இடத்திலும் இவ்வளவு பயங்கரமாக பேசப்படுகிறது. எனக்கு அப்போது ஒன்று புரிந்தது. இவ்வளவு பெரிய உருவம் உள்ள ஒருத்தன் இவ்வளவு அழகான பெண்ணை கல்யாணம் செய்திருக்கிறார்.

செமயா வாழ்வோம்
2 பேருக்குமே இது இரண்டாவது திருமணம். ஆனால் முதல் முறை திருமணம்போல நடந்துகொள்கிறார்கள் என்று பேசுகிறார்கள். அவரவர் வாழ்க்கையை அவரவர் ரசிப்பதை விட அடுத்தவர் வெறுப்பதும் கருத்து சொல்வதும் இருக்கிறது. அதை பார்க்கும்போதுதான் சொல்றோம். செமயா வாழப்போறோம்.

என் வாழ்க்கை
கமெண்ட்ஸ் என்றால் யாரு. என்னிடம் நேரில் வந்து என் கல்யாணத்தில் அபிப்ராயம் இல்லை என்று பேசினால் அவர்களிடம் பதில் சொல்ல தோன்றும். ஆனால் இவர்கள் போகிற போக்கில் எழுதுகிறார்கள். இதுபோல் அடுத்தவருக்கும் எழுதுவார்கள். அவர்கள் வேலையே இதுதான். எனக்கு இது வேலை இல்லை. நீங்கள் யார்? உங்களை திருப்திபடுத்த வாழ்ந்தால் என் வாழ்க்கையை எப்போது வாழ்வேன்." என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications