பெரம்பலூர் யாருக்கு? பாரிவேந்தர் வெல்வாரா? ரவீந்திரன் துரைசாமி கணிப்பு என்ன?
சென்னை: பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தரின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து சில விளக்கங்களை அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி முன்வைத்துள்ளார்.
பெரம்பலூர் தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பாரிவேந்தர்.

ஊடகங்களில் அவரது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகக் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதனால், கூடுதல் உற்சாகத்தில் உள்ளார் ஐஜேகே தொண்டர்கள். அவரது சமுதாய பலம் மிகப் பெரிய சாதகமாக அவருக்கு அமைந்துள்ளது.
பிரச்சார களத்தில் பாரிவேந்தர், "திமுக ஒரு நாடக கம்பெனி. ஆகவே அதை நம்பாதீர்கள். அவர்கள் கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்காக எந்த நல்ல திட்டங்களையும் செய்யவில்லை.
மோடியை திட்டுவதையே ஒரு வேலையாகச் செய்து வந்துள்ளனர். அந்த எதிர்ப்பு மூலம் கிடைக்கும் விளம்பரத்தை வைத்து கட்சியை வளர்த்து வருகின்றனர். அதனால் ஒரு ஊடக வெளிச்சம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
அதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. நீட் தேர்வு முறையைத் தவறாகக் காட்டி, பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஒருவர் ஐஏஎஸ் தேர்வு எழுதுகிறார். தோல்வி அடைந்ததும் தற்கொலை செய்து கொள்கிறார். அதற்காகத் தேர்வே வேண்டாம் எனச் சொல்ல முடியுமா?

அதைப்போல்தான் நீட் தேர்வு" என்றவர், தனது தொகுதிக்காக மத்திய அரசு வழங்கிய 17 கோடி ரூபாயில் இதுவரை 42 வகுப்பறைகளைக் கட்டி தந்துள்ளேன் என்று மக்களிடம் பட்டியல் போட்டு விளக்கிப் பேசினார்.
தொடர்ந்து பேசிய பாரிவேந்தர், "கடந்த முறை தமிழ்நாட்டிலிருந்து 38 எம்பிகளை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்பிவைத்தீர்கள். அதில் என்னை ஒருவனைத் தவிர மீதி உள்ள 37 எம்பிகள் செய்த சாதனை என்ன தெரியுமா?
நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தடுத்ததுதான் அவர்களின் சாதனை. அவையை முடக்குவதற்காகச் சட்டம் போட்டதுதான்.

அதேநேரத்தில் இத்தனை குழப்பங்களுக்கு இடையிலும் உங்களது நாடாளுமன்ற உறுப்பினரான நான் உங்களுக்குத் தேவையான நலத் திட்டங்களைச் செய்து தந்துள்ளேன். அந்தப் பெருமை வேறு எந்த எம்பிக்கும் கிடையாது. இல்லவே இல்லை" என்று கூறினார்.
இந்நிலையில் பாஜக சின்னமான தாமரையில் போட்டியிடும் பாரிவேந்தருக்காக வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது பற்றி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த தேர்தலில் இவரது வெற்றி வாய்ப்புக்காக சில ஆலோசனைகளைத் தான் அளித்ததாகவும் இப்போது அவர் கூறியுள்ளார்.
இது குறித்து ரவீந்திரன் துரைசாமி, "கடந்த 2019இல் பாரிவேந்தர் கள்ளக்குறிச்சியில் நிற்கலாம் என முடிவெடுத்தபோது, நான் சிலர் மூலம் அவருக்கு ஆலோசனை சொன்னேன். கள்ளக்குறிச்சி வேண்டாம், பெரம்பலூரிலேயே போட்டியிடுங்கள் என்று அவர் தரப்புக்குத் தகவல் தந்தேன்.
அவரை நேரில் சந்தித்து எனது கணிப்புகளையும் சொன்னேன். திருச்சியில் எங்களது சந்திப்பு நடந்தது. கீழ் மட்டத்திலிருந்து வளர்ந்து வந்தவர் அவர். ஆகவே மிகுந்த மரியாதையாக எங்களை நடத்தினார். எங்கள் கருத்துகளைக் கேட்டுக் கொண்டார்.

அப்போதும் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. அவருக்காக ஒரு கருத்துக்கணிப்பு எடுத்துக் கொடுக்கச் சொன்னார். அப்படி ஒரு சர்வேவை எடுக்க 15 முதல் 25 லட்சம் ரூபாய் செலவாகும் என்று நினைக்கிறேன் என்று அவரே சொன்னார்.
நான் எங்களுக்குக் கொடுக்கத்தான் அவர் அந்தத் தொகையைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆகவே அந்தத் தொகை வேண்டாம் எனச் சொல்லி அவருக்காக வேலை செய்ய ஒப்புக்கொண்டேன்.
கடந்த முறை நேருதான் அவரது வெற்றிக்கு மிகக் கடுமையாக யூகங்களை வகுத்தார். இந்தமுறை அவரது மகனே பாரிவேந்தரை எதிர்த்துப் போட்டியிடுகிறார். கள சூழல் தலைகீழாக மாறி உள்ளது.
பெரம்பலூர் பகுதியில் பாரிவேந்தர் ஒரு நட்சத்திர வேட்பாளர். அதில் சந்தேகமே தேவை இல்லை. குறிப்பாக உடையார் சமூகத்தினர் அங்கே அதிகம் உள்ளனர். பொதுவாக உடையார் சமூகத்தினருக்கு மற்ற சமூகத்தினரை அரவணைத்து அரசியல் செய்யும் பக்குவம் உண்டு. ஆகவே, பாரிவேந்தருக்கு களம் சாதகமாகவே உள்ளது.
திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம் என்று பாரிவேந்தர் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இதுவே மிகத் தைரியமான முடிவு. அவர் மீண்டும் திமுக பக்கம் தேவை என்றால் சென்றிருக்க முடியும். அதைப் போலத்தான் அதிமுக.
ஆனால், மோடியின் ஆதரவாளராக பாஜகவே தேவை என்று முடிவெடுத்துள்ளார். பாஜகவுக்குக் கிடைத்துள்ள பலமான வேட்பாளர்களில் மிகமிக முக்கியமானவர்.
பெரிய அளவுக்கு பாஜக பலம் எல்லாம் இவருக்கு உதவாது. அவர் நிறைய நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளார். தனக்கான ஒரு பலத்தை அவர் உருவாக்கி வைத்துள்ளார். அதை நம்பித்தான் தேர்தலில் களம் காண்கிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு சாதகமாகவே இருக்கிறது" என்கிறார்
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications