விஜய் வெறும் காகிதபுலி.. 2026ல் சீமான் வளர்வார்..விஜய் வீழ்வார்! ரவீந்திரன் துரைசாமி சொல்லும் ஆரூடம்
சென்னை: அரசியல் குறித்து பேசும் விஜய் ஏன் விக்கிரவாண்டி தேர்தலில் நிற்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள ரவீந்திரன் துரைசாமி, கமல்ஹாசன் போல் ஒரு பார்ட் டைம் அரசியல்வாதி என விமர்சித்துள்ளார். மேலும், விஜய் வெறும் காகித புலி எனவும், 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் வீழ்வார், நாம் தமிழர் கட்சி சீமான் வளர்வார் என பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழிடம் பேசிய ரவீந்திரன் துரைசாமி," ரஜினி சீமான் சந்திப்பு ஆர்எஸ்எஸ் ஏற்பாடா? என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் பலம் நிரூபிக்காத விஜய் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி உடன் விஜய் கூட்டணி சென்றால், ஜானகியுடன் கூட்டணி சேர்ந்த சிவாஜி கணேசன் போல் தோற்றுவிடுவார். விஜய் தனித்து நின்றால் அவருக்கு ஒரு வாக்கு வங்கி கிடைக்கும். ஆனால் அதையும் மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் தனித்துப் போட்டியென விஜய் சொல்லவில்லை, சாதி கட்சிகளுடன் கூட்டணியா? அதிமுகவுடன் கூட்டணியா? அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணியா? என்பது குறித்தும் விஜய் தெளிவாக விளக்கவில்லை. கால் சதவீதம் ஓட்டு வாங்கி வைத்திருக்கும் கிருஷ்ணசாமி மட்டுமே விஜய் உடன் செல்வதாக கூறியிருக்கிறார். ரஜினிகாந்த் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் களத்தில் அவர் இல்லை. அவர் 2021 இல் ஒருவரை ஆதரித்து அறிக்கை விட வேண்டும் என கேட்டபோதும் மறுத்துவிட்டார். 2024 தேர்தலிலும் மோடியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டபோதும் அவர் மறுத்துவிட்டார்.
ரஜினி என்பவர் அரசியல் களத்தில் இல்லாதவர். அதனை விட்டு விலகியவர். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலின் மதிக்கக் கூடிய நபர். அவரை எட்டு சதவீத வாக்குகள் பெற்ற சீமான் போய் பார்க்கிறார். இதற்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?. மகாராஷ்டிரா தேர்தலிலும் கர்நாடகா தேர்தலிலும் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு கொடுக்கவேண்டும் என நான் முயற்சி செய்தேன். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
சுடுகாட்டில் கூட தான் இடம் இருக்கிறது வெற்றிடம் இருக்கிறது என பேசிய சீமான் ரஜினியை சந்தித்தது குறித்து பேசுகிறார்கள். அன்று ரஜினி சீமானுக்கு போட்டியாளர். இன்றைக்கு ரஜினி அரசியல் களத்தில் இல்லாதவர் .இன்றைக்கு ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் செல்வாக்கு உள்ள நபர். சீமான் ரஜினியை பார்த்தது அந்த வகையில் தான். நாம் தமிழர் கட்சியிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகிறார்கள் என்ற செய்தி அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்படுகிறது. உண்மை அப்படி இல்லை.
இவ்வளவு பேசும் விஜய் ஏன் விக்கிரவாண்டி தேர்தலில் நிற்கவில்லை. அப்படி நின்றிருந்தால் திருமங்கலத்தில் சரத்குமாரின் நிலை ஏற்பட்டிருக்கும். அரசியல் நேர்மை இருப்பவர் ஏன் விக்கிரவாண்டி தேர்தலில் நிற்கவில்லை? தேர்தலில் நிற்காததால் தான் பார்ட் டைம் அரசியல்வாதியான கமலஹாசன் அரசியலில் கீழே சென்றார். 2026 தான் டார்கெட் என கூறுவது அரசியல் வியாபாரம். கமலஹாசனை போல் பார்ட் டைம் அரசியல் செய்பவர்கள் தான் அப்படி பேசுவார்கள்.
இடைத்தேர்தலில் ஓடுபவர்கள், கூரை ஏறி கோழி பிடிக்காதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவார்களா? ஆனால் விக்கிரவாண்டி தேர்தலில் சீமான் களத்தில் இறங்கினார். அதனால் சீமானை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். பார்ட் டைம் அரசியல்வாதியான விஜய் மக்கள் புறக்கணிப்பார்கள்.
வரும் தேர்தலில் தற்போது இருக்கும் 8 சதவீத வாக்குகளை விட அதிக வாக்கு சதவீதத்தை சீமான் பெறுவார். இரட்டை இலக்க வாக்கு சதவீதம் அவருக்கு கிடைக்கும். 1.8% வாக்குகளில் இருந்து பல அரசியல் கட்சிகளை எதிர்த்து, விஜய் ஒரு ஆளே கிடையாது என பேசியும் 6.2% வாக்குகளை பெற்ற சீமான் தற்போது 8 சதவீத வாக்குகளை பெற்றிருக்கிறார். விஜய் வெறும் காகிதப்புலி தான். ஆனால் சீமான் அப்படி இல்லை. களத்தில் இருந்து மக்களை சந்தித்திருக்கிறார். வரும் தேர்தலில் சீமான் வளர்வார் விஜய் வீழ்வதை அனைவரும் பார்ப்பார்கள் என பேசியுள்ளார்..
முழு பேட்டிக்கு வீடியோவை பார்க்கவும்..












Click it and Unblock the Notifications