‘நீங்க அரசியலை விட்டு விலகினது நல்லது’.. ரஜினியிடம் சீமான் பகீர்.. இன்னும் என்ன பேசினாங்க தெரியுமா?
சென்னை: ரஜினிகாந்த், சீமான் சந்திப்பு அரசியலில் பரபரப்பை கிளப்பியது. நடிகர் விஜய் அரசியல் வருகை நாம் தமிழர் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ரஜினி – சீமான் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ரஜினிகாந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தித்து பேசினர். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ நீண்ட நாட்களாகவே நாங்கள் சந்திக்க திட்டமிட்டிருந்தோம். அந்த வகையில் இது திட்டமிட்ட சந்திப்பு. இதில் நாங்கள் நிறைய அரசியல் பேசினோம் என்று சீமான் கூறியிருந்தார்.

இந்த சந்திப்புக்கு அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, தான் காரணம் என்று கூறப்பட்டது. சந்திப்பின்போது ரஜினி, சீமானுடன் அவரும் இருந்தார். இதுகுறித்து ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், “ரஜினி மக்களிடம் நிரூபிக்கப்பட்ட தலைவர். ரஜினிகாந்த் – சீமான் சுமார் 2.25 மணி நேரம் சந்தித்தனர். அப்போது நானும் இருந்தேன்.
1.30 மணி நேர சந்திப்பில் நான் இருந்தேன். 45 நிமிடங்கள் ரஜினியும், சீமானும் தனியாக பேசினார்கள். நான் இருக்கும்போதும் அரசியல் பேசினோம். ரஜினியை பிரதமர் மோடி மதிக்கிறார். மோடியே அவரை தேடி வந்து பார்த்தார். சிலர் ஜெயலலிதா மீதான வன்மத்தில் மோடியை சந்தித்தனர்.
தமிழ்நாடு முதல்வர் மு..க. ஸ்டாலினும் ரஜினி மீது மரியாதை வைத்துள்ளார். அந்த வகையில் 8 சதவீதம் வாக்கு வங்கி வைத்துள்ள ஒரு தலைவர் ரஜினியை சந்தித்துள்ளார். சீமானும் அவரை மதிக்கிறார். சிலர் காக்கா என கதறுவதில் எந்த பயனும் இல்லை. கர்நாடகாவில் ராஜ்குமாரை போல இங்கு ரஜினிகாந்துக்கு மதிப்புள்ளது.
'நல்ல வேளையாக அரசியலில் இருந்து விலகிவிட்டிர்கள். நல்ல முடிவு. உங்களுக்கு பணம் செலவு இல்லை. நிம்மதியாக இருக்கிறீர்கள். குழப்பம் இல்லாத தெளிவான முகத்துடன் தேஜஸாக உள்ளீர்கள். அரசியலில் என்னை மாதிரியான காட்டான்களால் தான் எல்லோரையும் சமாளித்து எடுத்து செல்ல முடியும். உங்களை மாதிரி மென்மையானவர்களுக்கு இது பொருந்தாது.’ என்று ரஜினியிடம் சீமான் கூறினார்.
வன்மத்திலும், காழ்ப்புணர்ச்சியிலும் அரசியலுக்கு வருபவர்கள் சிவாஜி போல கவலைப்பட வேண்டிய நிலை வரும் என்பதைத்தான் சொல்ல வருகிறோம். சினிமா பற்றியும் பேசினார்கள். மகேந்திரன் பாரதிராஜா, மணிவண்ணன், வைரமுத்து ஆகியோரின் திறமை குறித்து மணிக்கணக்கில் பேசினார்கள். சீமான் எல்லோரிமும் ஒரே மாதிரி பேசும் நபர்.

மடை திறந்த வெள்ளம் போல சீமான் பேசினார். ரஜினி எல்லாவற்றையும் கூர்ந்து கவனிப்பவர். அப்படி சீமான் பேசுவதையும் அவர் நன்கு கவனித்தார். 45 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தை, 8 சதவீதம் வாக்கு வைத்துள்ள சீமான் சந்திப்பதில் தவறு என்ன இருக்கிறது.
இருவரும் ஒரே துறையில் இருந்தவர்கள். பரஸ்பரம் அறிந்தவர்கள். அந்த அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னபோது சீமான் அவரை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் போட்டியாளர். போட்டியாளர் என்பதால் அன்றைக்கு விமர்சித்தார். தற்போது போட்டியாளர் இல்லை என்பதால் சந்தித்து பேசியுள்ளார்கள்.
சிலர் சீமானை ஏமாற்றிவிடலாம் என நினைத்தனர். உண்மையில் அவர்கள் ஏமாந்துவிட்டனர். போட்டியாளர் இல்லை என்கிற போது அவரை சந்திப்பது இயல்பு தான்.” என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications