சின்ன வெளிச்சம்.. சென்னையில் லேசாக சரியும் கொரோனா கேஸ்கள்.. குறைந்த "டிபிஆர்".. இந்த கிராஃபை பாருங்க
சென்னை: சென்னையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா கேஸ்கள் சரிய தொடங்கி உள்ளன. கடந்த வாரங்களில் இருந்ததை விட கேஸ்கள் கொஞ்சம் குறைய தொடங்கி உள்ளன.
தமிழகத்தில் நேற்று 30621 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 183772 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக இதுவரை 1499485 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று 6991 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளன. 42579 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

சென்னை
சென்னையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 7000+ கேஸ்கள் தினமும் பதிவாகி வந்தது. தொடர்ந்து இந்த கேஸ்கள் வேகமாக உயர்ந்து வந்தது. இது 8000 கூட தொடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது திடீரென கேஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக நேற்று சென்னையில் 6991 கேஸ்கள் மட்டுமே பதிவானது.

மாற்றம்
இது பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கூட கொரோனாவிற்கு எதிரான போரில் சிறிய நம்பிக்கையை இது அளிக்கிறது. சென்னையில் இத்தனை நாட்கள் பாசிட்டிவிட்டி ரேட் எனப்படும் டிபிஆர் 25.1% ஆக இருந்தது. அதாவது சென்னையில் மொத்தமாக டெஸ்ட் செய்யப்படும் நபர்களில் 25.1% பேருக்கு கொரோனா பாசிட்டிவ் வந்தது. அதுதான் தற்போது குறைந்துள்ளது.

சிறிய வெளிச்சம்
சென்னையில் கடந்த ஒரு வாரமாகவே ஒரே அளவு சாம்பிள்தான் டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. சராசரியாக 30 ஆயிரம் பேருக்கு தினமும் சென்னையில் மட்டும் டெஸ்ட் செய்யப்படும் நிலையில் கேஸ்கள் திடீரென குறைந்துள்ளது. முக்கியமாக நேற்று 573 கேஸ்கள் குறைவாக வந்துள்ளது. இதனால் சென்னையில் ஒருவேளை கொரோனா உச்சத்தை கடந்து விட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
|
உச்சம்
அதாவது இந்த வார பாதியிலேயே கொரோனா கேஸ்கள் உச்சத்தை சென்னை கடந்து விட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் இன்றும் 6538 கேஸ்கள் பதிவானது. இது நேற்றை விட 453 கேஸ்கள் குறைவாகும். இதனால் கிராப் சரிவு கொஞ்சம் உறுதியாகி உள்ளது. அடுத்த 2-3 நாட்களும் இதேபோல் கொரோனா கேஸ்கள் குறைவாக வந்தால் இதை உறுதி செய்து விடமுடியும் . 6000க்கும் கீழ் சென்று படிப்படியாக கேஸ்கள் குறைந்தால் சென்னையின் கிராப் சரிந்துவிட்டது என்று உறுதி செய்ய முடியும்.

சரிவு
தற்போது ஏற்பட்டு இருக்கும் சரிவு லாக்டவுன் காரணமாக ஏற்பட்டதாகவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள். 4 நாட்கள் லாக்டவுன் மூலம் கேஸ்கள் சரிந்துள்ளன. இப்போது கட்டுப்பாடுகள் வேறு அதிகமாகி உள்ளன. போக போக மேலும் கேஸ்கள் சரியும் என்று கணிக்கப்படுகிறது.

ஆனால்
மேலே இணைக்கப்பட்டுள்ள கிராப் மூலம் சென்னையில் கேஸ்கள் குறைந்ததும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் இது தொடக்கம்தான். லாக்டவுனின் உண்மையான பலன் இனிதான் தெரியும். இன்னும் 10-14 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications