அதிமேதாவி அமைச்சருக்கு முதல்வர் அறிவுரை சொல்வாரா? கடந்து செல்வாரா? - ஆர்பி உதயகுமார் கேள்வி!
சென்னை : உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை முதல்வர் எப்போதும் போல கடந்து செல்வாரா? அல்லது கவனத்தில் கொண்டு செயல்படுவாரா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலவச திட்டங்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய விவாதத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய கருத்து பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி 'நீங்கள் மட்டும் தான் புத்திசாலி கட்சி என நினைக்க வேண்டாம்' எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கையில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிதி அமைச்சரின் அதிமேதாவித்தனமான, அரைவேக்காட்டுத் தனமான கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றமே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் ஆர்பி உதயகுமார்.

இலவச திட்டங்கள்
இலவச திட்டங்கள் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்று நடத்திய விவாதத்தில் பேசிய தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிதி எப்படி கையாளப்படுகிறது என்பதை கண்காணிப்பவராக உச்ச நீதிமன்றம் எந்த அடிப்படையில் செயல்படுகிறது? அரசியலைப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் மட்டுமல்ல எந்த நீதிமன்றமும் எப்படி மக்களின் பணம் செலவிடப்படுகிறது என்பதை முடிவு செய்யும் அதிகாரம் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்ட சட்டமன்றங்களுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டார்.

ஏன் கேட்க வேண்டும்
மேலும், பிரதமர் மோடி இலவசங்கள் வழங்கும் கலாசாரத்தை எதிர்ப்பது குறித்துப் பேசிய அமைச்சர் பிடிஆர், 'உங்களுக்கு ஏதேனும் சிறப்பு நிபுணத்துவம் இருக்க வேண்டும் அல்லது பொருளாதாரத்தில் இரண்டு டாக்டரேட் அல்லது நோபல் பரிசு என நீங்கள் எங்களைவிட சிறந்தவர் என்பதை நிரூபிக்க ஏதாவது ஒன்று செய்திருக்க வேண்டும். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார். அமைச்சர் பிடிஆரின் இந்தப் பேச்சு பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

நீதிபதி கருத்து
இந்நிலையில், நேற்று இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, திமுக சார்பில் ஆஜரான திமுக எம்.பியும் வழக்கறிஞருமான வில்சனிடம், இலவசங்கள் குறித்து திமுக அமைச்சர்கள் அளித்த பேட்டியை பார்த்ததாக குறிப்பிட்ட தலைமை நீதிபதி ரமணா, திமுக மட்டுமே புத்திசாலி கட்சி என எண்ண வேண்டாம் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எது இலவசம், எது பொதுநலன் என்பதை ஆராய வேண்டும். இதுகுறித்து உரிய முறையில் விவாதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். இது மீண்டும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

நீதிபதியின் கண்டனம்
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கருத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது, இது ஒரு விவாதப் பொருளாக மாறி உள்ளது. தலைமை நீதிபதி மக்கள் மீது அக்கறை கொண்டதின் காரணமாக, பல்வேறு கருத்துக்களை கூறியுள்ளார். பிரதமர் நாட்டை வல்லரசு ஆக்க கடுமையாக உழைத்துக் கொண்டுள்ளார், இலவசம் நிரந்தர தீர்வாகாது, மாற்றாக திறமையை வளர்க்கக்கூடிய நலத் திட்டங்களை வழங்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அறிவுரை சொல்ல அனுபவமே போதும்
ஆனால் அதற்கு நிதி அமைச்சர் ஆங்கில தொலைக்காட்சியில் இதை தெரிவிப்பதற்கு முதலில் சட்டரீதியான அனுமதி இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் என்னை விட சிறந்தவரா, என்று பிரதமருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அறிவுரை சொல்ல அனுபவமே போதுமானது என்பது நிதி அமைச்சருக்கு தெரியவில்லை. கருத்துக்கள் சொல்ல அனைத்து குடிமக்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமை பாரத பிரதமருக்கும் உண்டு, நீதிபதிக்கும் உண்டு.

கார்ப்பரேட் கம்பெனி முதலாளி போல்
நிதியமைச்சர் தான் பெற்ற அனுபவத்தை கார்ப்பரேட் கம்பெனி முதலாளி போல் பேசி உள்ளார், யார் சொன்னாலும் கேட்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டுள்ளார். அவர் மட்டுமே நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவது போல் தோற்றத்தை உருவாக்கி உள்ளார், அவர் பணிபுரிந்த நிறுவனம் இவரின் தொடர்ந்த செயல்பாட்டால் என்ன பாடுபட்டது என்று அனைவருக்கும் தெரியும்.

கூட்டாட்சி தத்துவம்
நாங்கள் ஒரு ரூபாய் கொடுக்கிறோம், பதிலுக்கு 35 பைசாவை ஜிஎஸ்டி மூலம் திருப்பி கொடுக்கிறது. நிதி கூடுதலாக திரட்டித் தருபவர்களுக்கு தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். இருப்பவரிடம் வாங்கி, இல்லாதவர்களுக்கு கொடுத்து அனைவரையும் அரவணைப்பது தான் கூட்டாட்சி தத்துவம், இந்த கூட்டாட்சி என்பது வலிமை மிக்கதாகும், ஒரு சாமானியருக்கு கூட புரியும் தத்துவம் நிதி அமைச்சருக்கு புரியவில்லை.

தகுதி இருக்கிறதா எனக் கேட்கிறார்
மக்கள் கேள்வி கேட்க வந்தாலும், பதில் சொல்ல நிதி அமைச்சர் முன்வரவில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி கேட்டால் அதற்கு என்ன தகுதி இருக்கிறது என்ற தொனியில் நிதி அமைச்சர் பேசுகிறார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்தார். மதுரை மாவட்டத்தில் எடப்பாடியார் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை நாங்கள் பட்டியலிட்டால், எந்த கருத்தும் கூறாமல் அதை திசை திருப்புகிறார். ஜனநாயக நாட்டில் மக்கள் பிரதிநிதியாக இருப்பவர்கள், தார்மீக கடமையாக பதில் சொல்ல வேண்டும்.

அவர் தயாராக இல்லை
அரசு ஊழியர்கள் கூட நிதி அமைச்சர் பற்றி முதலமைச்சரிடம் புகார் கூறியுள்ளார்கள். யார் என்ன சொன்னாலும், ஜனநாயக மாண்புப்படி பணியாற்ற அவர் தயாராக இல்லை. நிதி அமைச்சர் மக்கள் விரோதப் போக்கை தன் தொகுதியில் இருந்து தொடங்கி, மாநில அரசு, மத்திய அரசு என இன்றைக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்று கண்டனத்திற்கு உள்ளாகி உள்ளார்.

அதிமேதாவித்தனம்
நிதி அமைச்சரின் அதிமேதாவித்தனமான, அரைவேக்காட்டுத் தனமான கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது, என்று உச்ச நீதிமன்றமே கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதற்கு உரிய விளக்கம் தர முதலமைச்சர் முன்வருவாரா, உச்ச நீதிமன்றம் நிதி அமைச்சரை கண்டித்ததை, எப்போதும் போல கடந்து செல்வாரா அல்லது உரிய நடவடிக்கை, அறிவுரை கொடுக்க முன்வருவாரா என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். யார் கேள்வி கேட்டாலும் கோபப்படாமல், நிதி அமைச்சர் சிந்தித்து உரிய பதிலை அளித்தால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications