ரிசர்வ் வங்கி நிலம் வழங்க மறுப்பு.. சென்னை கடற்கரை -வேளச்சேரி ரயில் பயணிகளுக்கு புதிய சிக்கல்?
சென்னை: ரிசர்வ் வங்கி நிலத்தை வழங்க மறுத்ததால், கோட்டை மற்றும் கடற்கரை நிலையங்களுக்கு இடையே பறக்கும் ரயிலுக்கான ஒரு வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை தெற்கு ரயில்வேக்கு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது பறக்கும் ரயில் சிந்தாதிரிப்பேட்டை மற்றும் வேளச்சேரி இடையே இயங்கி வருகிறது.சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது பாதை அமைக்கும் பணி நடந்து வருவதால் இப்படி குறுகிய தூரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயல்பு நிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் எனில் ரயில் வழித்தடம் அமைக்கும் பணிக்கு ரிசர்வ் வங்கி நிலத்தை வழங்க மறுத்ததால், கோட்டை மற்றும் கடற்கரை நிலையங்களுக்கு இடையே பறக்கும் ரயிலுக்கான ஒரு வழித்தடத்தை கைவிட தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை கோட்டைக்கும் சென்னை கடற்கரைக்கும் இடையே ஐந்து தடங்கள் இருக்கின்றன. சென்னை எழும்பூரில் இருந்து மூன்று தடங்களும், கோட்டை நோக்கி பறக்கும் ரயில்களுக்கு இரண்டு வழித்தடங்களும் உள்ளன. இந்நிலையில் கடற்கரை-எழும்பூர் நான்காவது பாதை மார்ச் மாதத்திற்குள் கொண்டுவருவதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே தெற்கு ரயில்வேயால் செயல்படுத்தப்படும் நான்காவது ரயில் பாதைத் திட்டம் 7 மாதங்களில் முடிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கையுடன் பணிகளை வேகமாக செய்து வருகின்றனர். நான்காவது ரயில் பாதை திட்டப் பணிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது.
நான்காவது பாதை பணிகள் முடிந்ததும் பறக்கும் ரயில்கள் கோட்டைக்கும் கடற்கரைக்கும் இடையே ஒரே பாதையில் இயக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏனெனில் தற்போது, சென்னை கோட்டைக்கும் சென்னை கடற்கரைக்கும் இடையே ஐந்து தடங்கள் உள்ளன, இதில் எழும்பூர் பிரிவில் இருந்து மூன்று தடங்களும், கோட்டை நோக்கி பறக்கும் ரயில்களுக்கு இரண்டு பாதைகளும் உள்ளன தற்போது பயன்படுத்தப்படும் இரண்டு பறக்கும் ரயில் வழித் தடங்களில் ஒன்று சரக்கு, மற்றும் விரைவு ரயில்களுக்கு ஒதுக்கப்பட உள்ளதாம்.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகணேசன் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ரயில் வழித்தடம் அமைக்கும் பணிக்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (ஆர்பிஐ) நிலத்தின் ஒரு பகுதியைப் பெற முடியவில்லை. எனவேதான் கோட்டைக்கும் கடற்கரைக்கும் இடையே ஒரு பறக்கும் ரயில் வழித்தடத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.
இதன் காரணமாக கோட்டை மற்றும் கடற்கரை இடையே பறக்கும் ரயிலை இயக்கும் போது, ரயில் சேவைகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது. அதாவது கடற்கரை முதல் வேளச்சேரி வரை இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவைகளின் தினசரி எண்ணிக்கை கணிசமாக குறையும் அபாயம் உள்ளதாக பயணிகள் மற்றும் முன்னாள் லோகோ பைலட்டுகள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆனால் இதை மறுக்கும் மூத்த ரயில்வே அதிகாரிகள் இது ஒரு குறுகிய பகுதி மட்டுமே என்பதால், ரயில் சேவைகளை குறைக்க வேண்டிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்றும் தெரிவித்தனர். மேலும் ரயில் பாதை அமைக்க ரிசர்வ் வங்கியின் நிலத்தை பெற நிதியமைச்சகத்தினை தொடர்பு கொண்டு தீவிர முயற்சித்த போதிலும், அதனால் பலனளிக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போதைய நிலையில் 4வது வழித்தட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பூங்கா சந்திப்பு மற்றும் கோட்டை ரயில் நிலையங்களில் உள்ள பிளாட்பார்ம் தங்குமிடங்களில் 70% பிளாட்பார்ம் சுவர்களுடன் அகற்றப்பட்டுவிட்டது. அதேபோல், அந்த பகுதியில் உள்ள கோடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, ஸ்லீப்பர்கள், தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, ராயபுரம் யார்டுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன. தற்போது, பாலத்தின் கட்டுமானம் மற்றும் மாற்றியமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.
மேலும் கோட்டைக்கும் எழும்பூருக்கும் இடையே நான்காவது வழித்தடத்தை அமைப்பதற்கு வசதியாக, கூவம் வழியாக பைல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. எனவே திடடமிட்டபடி மார்ச் மாதத்திற்குள் எழும்பூர் கடற்கரை இடையே 4வது பாதை பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications