கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு - அடக்கம் செய்ய உடலை பெற்றுக்கொள்ள நோட்டீஸ்
மறு உடற்கூராய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மறு கூறாய்வு முடிந்த பின் பிரேதத்தை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்
கள்ளக்குறிச்சி: மறு கூறாய்வு முடிந்த பின்னர் மாணவியின் உடல் கள்ளக்குறிச்சி மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மறு கூராய்வு முடிந்த உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
Recommended Video
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் மரணம் அடைந்த மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு நடத்த தடையில்லை என்று மாணவியின் தந்தை செய்த முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நேற்று மறு உடல்கூராய்வு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் இயங்கி வந்த தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி, கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக பெற்றோர் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஞாயிறன்று ஏராளமானோர் பள்ளி முன்பு திரண்டதால் வன்முறையாக மாறி பள்ளி மற்றும் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அந்த மனுவில், தனது மகளின் சடலத்தை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, மாணவியின் சடலத்தை மறுகூராய்வு நடத்த உத்தரவிட்டார்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவா் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா் ஜூலியானா ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனை மருத்துவா் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வுபெற்ற இயக்குநா் சாந்தகுமாரி அடங்கிய குழுவையும் நியமித்து உத்தரவிட்டார்.
உடற்கூராய்வு முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். மாணவியின் தந்தை வழக்குரைஞருடன் உடற்கூறாய்வின் போது கலந்து கொள்ளலாம். இந்த வழக்கு தொடா்பாக மாணவியின் பெற்றோர் தொலைக்காட்சி உள்ளிட்டவற்றுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது. ஊடகங்கள் விசாரணை மேற்கொள்ளக் கூடாது. மறு உடற்கூராய்வுக்குப் பின், மாணவியின் உடலுக்கு அமைதியான முறையில் இறுதிச் சடங்கு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
மாணவியின் சடலம் மறுகூறாய்வின் போது தங்கள் தரப்பு மருத்துவரை நியமிக்கவும், அதுவரை மறுகூராய்வு உத்தரவை நிறுத்திவைக்கவும் கோரி மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோர் அடங்கிய அமா்வில் முறையீடு செய்யப்பட்டது. இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனா். இதைத் தொடா்ந்து, நீதிபதி சதீஷ்குமார் முன் மாணவியின் தந்தை தரப்பு வக்கீல் மீண்டும் ஆஜராகி, தங்கள் தரப்பில் குறிப்பிடும் மருத்துவரை மறுஉடற்கூறாய்வில் சோ்க்க வேண்டும் என முறையிட்டாா். இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
அப்போது, மாணவியின் தந்தை தரப்பில் ஆஜரான வக்கீல் இந்த தீா்ப்பில் தங்களுக்கு திருப்தி இல்லை. உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பாக முறையீடு செய்யவிருப்பதால், மறுகூறாய்வை உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றார். இந்த கோரிக்கையை நீதிபதி சதீஷ்குமார் நிராகரித்ததுடன், மறு உடற்கூறாய்வை நிறுத்தி வைக்க மறுத்துவிட்டார்.
இதனிடையே மறுஉடற்கூராய்வு செய்யும் போது தங்கள் தரப்பு மருத்துவரும் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நடைபெறவிருக்கும் மறு உடற்கூராய்வுக்கு தடையில்லை என்றும், மனுவை புதன்கிழமை விசாரணைப்பதாகவும் தெரிவித்து உத்தரவிட்டனர்.
மறுஉடற்கூராய்வுக்கு தங்கள் தரப்பு மருத்துவரையும் அனுமதிக்க வேண்டும் என்று திடீரென நீங்கள் கேட்பதை ஏற்க முடியாது என்றும், இன்று மாணவியின் உடற்கூறாய்வை நடத்த தடையில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றம் மாணவியின் உடலை மறுகூராய்வு செய்யும் போது, மாணவியின் பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும், வராவிட்டாலும் மறுகூராய்வு நடத்தவும் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகவும், இது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் பெற்றோர் தங்கியிருக்கும் வீட்டில் ஒட்டப்பட்டது.
இதனையடுத்து பெற்றோர் இல்லாமலேயே 3மணி நேரம் மறு உடல் கூறாய்வு நடைபெற்றது. இரவு உடல் கூறாய்வு முடிந்த பின்னர் மாணவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில் மறு கூராய்வு முடிந்த உடலை பெற்றுக்கொள்ளுமாறு அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு ஆய்வாளர் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மறுபிரேத பரிசோதனை நடத்தப்படும் என வட்டாட்சியர் மூலமும் வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞர் கேசவன் என்பவருக்கும், தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் தாங்கள் ஆஜராகவில்லை. மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டு பிரேதம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது பிரேதத்தை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும் படி குற்ற பிரிவு குற்றப்புலனாய்வு துறை சார்பில் உயிரிழந்த மாணவியின் வீட்டில் கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் விஜய பிரபாகரன் நோட்டிஸ் ஒட்டினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications