Jacto geo: ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்ட பின்னணி இதுதான்!
Recommended Video

சென்னை: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ஆம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால், பள்ளிகளில் கல்வி பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு அரசு தயாரில்லை
போராட்ட குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு தரப்பு புறந்தள்ளி விட்டது. ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாதவையாக உள்ளன என்பதால் இதை ஏற்க முடியாது என்று திட்டவட்டமாக அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துவிட்டார்.

அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை
மேலும் பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது சஸ்பெண்டு நடவடிக்கை, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீது கைது நடவடிக்கை என பல்வேறு நடவடிக்கைகளும் அரசுத் தரப்பிலிருந்து பாய்ந்தன. இந்த நிலையில் போராட்டம் நடத்துவோர் எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கியது.

பிசுபிசுத்த அரசு ஊழியர் போராட்டம்
நேற்றைய தினம் 95 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பிவிட்டதாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்தது. சென்னையில் சுமார் 100 சதவீதம் ஆசிரியர்களும் பணிக்கு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
|
ஜாக்டோ ஜியோவினருக்கு ஸ்டாலின் கோரிக்கை
இந்த நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜாக்டோ ஜியோ ஊழியர்கள், திமுக ஆட்சி மலரும் வரை பொறுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது அதற்கு முன்பாக தாங்கள் போராட்டத்தை நிறுத்தி விட்டு மாணவர்கள் நலனுக்காக மீண்டும் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

போராட்டம் வாபஸ் பெற இரு காரணங்கள்
இந்த நிலையில்தான் இன்று மாலை ஜாக்டோ ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வந்து ஒரு பக்கம் என்றால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கோரிக்கை மற்றொரு பக்கம் என இந்த போராட்டத்தை கைவிடுவதற்கான காரணங்களாக கூறப்படுகின்றன.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications