சிவப்பு நிறத்தில் நெய்யாற்றில் நவரை.. மணக்க மணக்க கொதித்த மீன் குழம்பு! கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை: கேரளா மாநிலத்தை பொறுத்தவரை சுமார் 10-12 லட்சம் மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். தினசரி புது மீன் கிடைப்பதால், மக்கள் வழக்கமான உணவாக இதைத் தேர்வுசெய்கிறார்கள். எனவே, அன்றாட உணவுகளில் மீன் கறியை தவிர்க்கவே முடியாது. அப்படித்தான் நெய்யாற்றுங்கரையில் நேற்று முன்தினமும் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுள்ளனர்.. அவர்களுக்கு என்ன ஆச்சு தெரியுமா?
கடல் உணவுகள் நன்மை தரக்கூடியவை என்று மருத்துவர்களே பரிந்துரைக்கிறார்கள்.. அந்தவகையில் மீன்கள் மருத்துவ குணமும், ஆரோக்கியமும் மிக்க சத்துக்கள் அடங்கியவை.

அதேசமயம், பழக்கத்தில் இல்லாத புது வகையான மீன்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.. சிலசமயம் விஷத்தன்மையுள்ள மீன்களையும் தெரியாமல் சாப்பிட நேர்ந்துவிடும்.
கடல் உணவுகள்
மீன்கள் விஷமாக 2 வகையான காரணங்கள் உள்ளன.. ஒன்று, மூலநீரின் மாசு - கடல் அல்லது நதி நீரில் உள்ள தொழிற்சாலை கழிவு, பிளாஸ்டிக், அல்லது ரசாயனங்கள் போன்றவை மீன்களின் உடலில் சேரலாம். அல்லது இயற்கை விஷம் (Natural Toxin) உள்ளிட்டவையும் காரணமாக இருக்கலாம்.
பெரிய அளவு கடல் மீன்கள் அதாவது, சுறா, சூரை, வாள்மீன், கிங் கானாங்கெளுத்தி, ஸ்வார்ட்ஃபிஷ், போன்ற மீன்வகைகளில் அதிகமான பாதரசம் உள்ளதால், இந்த மீன்களை சாப்பிடுவதை தவிர்க்க சொல்கிறார்கள்.
எனினும், மீன்களை சாப்பிட்டு மரணம்வரை போன சம்பவங்களும் இந்தியாவில் உண்டு.. குறிப்பாக மீன்வளம் நிறைந்த கேரளாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும்..
விஷம் நிறைந்த மீன்கள்?
திருவனந்தபுரத்தில் வசிக்கும் பிஜு என்பவர், 200 ரூபாய்க்கு கானாங்கெளுத்தி மீனை வாங்கி வந்துள்ளார். குடும்பத்தினர் அதை சமைத்து சாப்பிட்ட நிலையில், திடீரென அனைவருக்கும் உடல் நலம் பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்..
மீன் வாங்கிய இடமும் சுகாதாரமற்ற மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டும் எழுந்தது.. இதனால் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்த சென்றால், மீன் வாங்கி சென்ற இன்னொருவரிதன் மீனில் புழுக்கள் நெளிந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த நிகழ்வும் கேரளாவில் உண்டு. கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட திருச்சூரில், மீன் பிரியாணி சாப்பிட்டு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்திருந்தது.
குழிமந்தி மீன் பிரியாணி
அதாவது அங்குள்ள ஓட்டல் ஒன்றில் பல பேர் 'குழிமந்தி' மீன் பிரியாணியை சாப்பிட்டிருக்கிறார்கள்.. இந்த 'குழிமந்தி' மீன் பிரியாணியுடன் மயோனைசும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது.. எனவே, பிரியாணியுடன் மயோனைசை சேர்த்து சாப்பிட்ட 70 பேருக்கும் வாந்தி,மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 56 வயது பெண் உபைசா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
இதோ இப்போதுகூட, ஒரு கொடுமை நடந்துள்ளது.. கேரளாவின் நெய்யாற்றின் கரை பகுதியில் கடற்கரையோரம் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு பெரும்பாலும் மீன்கள்தான் உணவாக அமைந்துவிடுகிறது.
சிவப்பு வண்ண நவரை மீன்கள்
இதனால் அந்த பகுதிய மார்க்கெட்டுகளில் மீன்கள் குறைவான விலையிலும் கிடைக்கிறது.. அப்படித்தான், நேற்று முன்தினம் சிவப்பு வண்ண நவரை மீன்களை சிலர் வாங்கி சென்று சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்,. ஆனால் அன்றைய இரவு, மீனை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 35க்கும் மேற்பட்டவர்கள் நெய்யாற்றின்கரை, திருவனந்தபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.. அந்த ரிப்போர்ட் வந்தால்தான், 35 பேரின் உடல்நல பாதிப்புக்கு காரணம் தெரியவரும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
நவரை மீனின் சத்துக்கள்
Red Mullet என்று பெயரிலேயே சிவப்பு வண்ணத்தை கொண்டிருக்கும் இந்த நவரை மீன்கள், இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.. வறுவல், குழம்பு இரண்டுக்குமே ருசியாக இருக்கும்.. ஓமெகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் நிறைந்ததால், இருதயத்துக்கு நல்லது,. மூளையின் நினைவாற்றலுக்கு நல்லது.. Vitamin A, D, Selenium போன்ற சத்துக்கள் இருப்பதால் கண்களுக்கு நல்லது.
இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் இருப்பதால் ரத்தசோகையை தடுக்கக்கூடியது.. கல்லீரல், சிறுநீரகம், சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications