கண்கள் சிவந்த ஸ்டாலின்.. தலைவரே, இவங்க தான் அந்த 4 பேர்.. அறிவாலயத்தில் க்ளோஸ்டு டோர் மீட்டிங் ஷாக்
சென்னை: வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காக தமிழகம் காத்திருக்கும் நிலையில், அறிவாலயத்தின் கதவுகள் திடீரென மூடப்பட்டு நடத்தப்பட்ட ரகசிய விசாரணை திமுகவின் மூத்த அமைச்சர்களை அதிர வைத்துள்ளது... சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 முக்கிய மாவட்டங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகச் சொந்தக் கட்சியினரே 'உள்ளடி' வேலைகளில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களை அறிவாலயத்துக்கு அழைத்து ஆலோசித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இந்த மாவட்டங்களில் போட்டியிட்டுள்ள திமுக வேட்பாளர்கள், தேர்தல் முடிந்ததுமே, கட்சித் தலைமைக்கு அனுப்பிய புகார்களின் அடிப்படையிலேயே அவர்கள் அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டார்களாம்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு
அதுமட்டுமல்ல, சென்னை மற்றும் சென்னை புறநகர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பலர், உதயநிதியின் நேரடி கண்காணிப்பிலும் அவருக்கு நெருக்கமானவர்களாகவும் இருப்பதால், கடைசி 10 நாட்களில் தொகுதிக்குள் திமுகவினரே ஒத்துழையாமை நடத்தி வந்ததை உதயநிதியின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்.. அதுவும் கடைசி 3 நாட்கள் இது அதிகமாக இருந்ததை உதயநிதியிடம் தெரிவித்துள்ளனர்.
உடனே இதனை ஸ்டாலிடம் விவாதித்துள்ளார் உதயநிதி. அதாவது, 23-ந்தேதி வாக்குப்பதிவு முடிந்ததும் அன்றைய இரவு துபாய்க்கு பறந்தார் உதயநிதி. அதற்கு முன்னதாகவே, இந்த உள்ளடிகளை ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டுதான் சென்றாராம்.. அதன் பிறகே வேட்பாளர்களை அறிவாலயத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
என்ன நடந்தது பெரம்பூர் தொகுதியில்
அந்த ஆலோசனையில் பெரம்பூர் தொகுதி குறித்து தான், முதலில் கேள்வி எழுப்பியிருக்கிறார் ஸ்டாலின். அப்போது, பெரம்பூர் தொகுதி வேட்பாளர் ஆர்.டி.சேகர், "தொகுதிக்குள் நடக்கும் எனக்கு எதிரான உள்ளடி வேலைகளை அறிந்த சின்னவர் (உதயநிதி, தொகுதி பொறுப்பாளர் கிரி ராஜன், சரியாக ஒத்துழைப்புத் தராததால் அவரை மாற்றி விட்டு ஜோயல் மற்றும் செந்தில் (உதயநிதியின் உதவியாளர்) தலைமையில் ஒரு குழுவினரை அனுப்பி தொகுதி பணிகளை கவனிக்க வைத்தார்.
அவர்கள் இருந்தவரை தொகுதிக்குள் தலைக்காட்டிய தொகுதி நிர்வாகிகள் (வட்டம் மற்றும் பகுதி) 21-ந்தேதி இரவில் இருந்து எந்த வேலையையும் பார்க்கவே இல்லை. இதற்கு காரணம் யார் என்பதை இந்த கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல இயலவில்லை. தலைவர் அனுமதித்தால் தனிப்பட்ட முறையில் உங்களிடம் தெரிவிக்கிறேன்" என சொல்லியிருக்கிறார்.
அமைச்சர்கள் மீதே புகார்?
இதே ரீதியில்தான் மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களும் புகார் வாசித்துள்ளனர். குறிப்பாக, இந்த புகார்கள் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ. அன்பரசன் மற்றும் ஆவடி நாசர், சுதர்சனம் ஆகியோருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
பெரம்பூர் மட்டுமல்லாது மற்ற தொகுதிகளின் வேட்பாளர்களும் இதே போன்ற புகார்களை வாசித்திருக்கிறார்களாம்.. குறிப்பாக, அமைச்சர்களான சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி நாசர் மற்றும் சுதர்சனம் ஆகியோருக்கு எதிராகவே பெரும்பாலான புகார்கள் முனகி எழுந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்டாலின் அடுத்த முடிவு?
"தலைவர் அனுமதித்தால் அந்த துரோகிகளின் பெயர்களைத் தனியாகச் சொல்கிறேன்" என்று வேட்பாளர்கள் ஆவேசப்பட்ட நிகழ்வுகள் கட்சியின் மூத்த தலைவர்களையே அதிரவைத்துள்ளது.
ஒருபுறம் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்பட்டாலும், மறுபுறம் சொந்தக் கட்சி நிர்வாகிகளே கடைசிக் கட்டத்தில் கைவிட்டது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்ல, தமிழக அமைச்சரவையில் விரைவில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்றும், ஒரு சில அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு அவர்களுக்கு 'கல்தா' கொடுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன. ஆனால், இப்போது அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட வேட்பாளர்களே நேரடியாக அமைச்சர்களுக்கு எதிராகப் புகார்களை வாசித்திருப்பது திமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சிறப்பு நிருபர் எழில்
-
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
தூக்கப்படும் சீனியர்கள்? துண்டாகும் மாவட்டங்கள்? ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்கெட்ச்! 78 டூ 100 திமுக பிளான் -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
திமுக தோல்வி.. "எல்லார் மீதும் தவறு இருந்தால் யார் மீது நடவடிக்கை எடுப்பது?" வைரமுத்து சொன்ன காரணம்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள்











Click it and Unblock the Notifications