அப்ரூட் பிளாட் வாங்கினாலும் பத்திரம் எழுத மறுப்பு? நில வகைப்பாட்டில் ரூல்ஸ் மாறுகிறது! அரசு அதிரடி
சென்னை: அங்கீகாரம் இருந்தும் வீட்டு மனைகளில் நிலவும் சிக்கலுக்கு விரைவில் தீர்வு வரப்போகிறது.. அந்தவகையில், அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாக்களில், நில வகைப்பாடு நஞ்சை, புஞ்சை என இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்பட உள்ளதாக தமிழக வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளள்து.. இதற்கு என்ன காரணம்? அதிகாரிகள் இதுகுறித்து சொல்வதென்ன?
அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளைப் பத்திரப்பதிவு செய்வதைத் தடை செய்வதற்கான சட்டம் தான் பிரிவு 22-A என்பதாகும்.. அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள் தொடர்பான பத்திரப்பதிவு சட்டம் பிரிவு 22-A (Section 22-A of the Registration Act, 1908 - Tamil Nadu Amendment) முக்கியமாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டது.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதைத் தடுப்பது மற்றும் சட்டவிரோதமான லே-அவுட்களை ஒழுங்குபடுத்துவதுதான் இச்சட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் அல்லது லே-அவுட்களில் உள்ள மனைகளை விற்பனை, தானம், அடமானம், பரிமாற்றம் அல்லது குத்தகை போன்ற பத்திரப்பதிவுகளை பதிவு அதிகாரி (Registering Officer) மறுக்க இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
அங்கீகாரம் இல்லாத மனைகள்
அந்தவகையில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாத மனைகள் விற்பனைக்கு கடந்த 2016ல் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முறையாக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் (DTCP/CMDA) கீழ் அங்கீகாரம் பெற்று மனைகளை விற்பனை செய்து வருகின்றன.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திலும் (RERA) இந்த மனைகள் பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டாலும், பதிவு செய்யும் போது சார்-பதிவாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பெரிய குழப்பம் நீடித்து வருகிறது. இதற்குக் காரணம், வருவாய் துறை ஆவணங்களில் (பட்டாவில்) நிலத்தின் வகைப்பாடு மாறாமல் இருப்பதுதான்.
தமிழகத்தில் 'டவுன் சர்வே' (Town Survey) மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, வருவாய் ஆவணங்களில் நிலங்கள் வீட்டு மனைகளாக (மனை அல்லது குடியிருப்பு' குறிப்பிடப்படுகின்றன.
வீட்டு மனைகள்
ஆனால், பெரும்பாலான இதர பகுதிகளில், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலங்கள் கூட, பட்டாக்களில் நஞ்சை அதாவது நீர் பாசனம் உள்ள நிலம் அல்லது புஞ்சை அதாவது மானாவாரி நிலம் என்றே குறிப்பிடப்படுகின்றன.
பதிவுத்துறை சட்டத்தின் பிரிவு 22-A-ன்படி, அங்கீகாரம் இல்லாத மனைகளை பதிவு செய்யக்கூடாது என்ற விதி அமலில் உள்ளது. இந்த சூழலில், மனைக்கான அங்கீகார ஆவணங்கள் (DTCP/CMDA) சரியாக இருந்தாலும், பட்டாவில் விவசாய நிலம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காரணம் காட்டி, சில சார்-பதிவாளர்கள் பத்திரப்பதிவை மறுக்கின்றனர்.
நஞ்சை, புஞ்சை நிலவகைப்பாடு
அதையும் மீறி பதிவு செய்தால், தணிக்கையின்போது அந்த பதிவு மோசடி என்று குறிப்பு எழுதப்பட்டுவிடும் என்று சார்-பதிவாளர்கள் கலங்குகிறார்கள். இதன்காரணமாக, சட்டப்படி அங்கீகாரம் பெற்றும் மனைகளை விற்க முடியாமல் பொதுமக்களும், நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஒரு தீர்வை எடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை அதிகாரிகள் வருவாய் துறையிடம் புகார்களை தந்துவந்த நிலையில், வருவாய் துறை உயரதிகாரிகள் மட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இறுதியில் அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளின் பட்டாக்களில், நில வகைப்பாடு நஞ்சை, புஞ்சை என இருப்பதை மாற்ற நடவடிக்கை எடுப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
எளிதாகும் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பதிவு
அந்தவகையில், டவுன் சர்வே நடக்காத பகுதிகளில் உள்ள குடியிருப்பு பட்டாக்களில் நில வகைப்பாட்டைக் குறிப்பிடுவதற்கான உத்தரவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியிருக்கிறது.
வருவாய்த் துறையின் இந்த நடவடிக்கையானது, அங்கீகரிக்கப்பட்ட மனைகளின் பதிவை எளிதாக்கும் என்றும், சார் பதிவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட காலப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications