சூப்பர்.. பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை அபாரம்.. "சக்ஸஸ்" செய்த தமிழக பத்திர பதிவுத்துறை
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக, பல்வேறு அதிரடிகளை முன்னெடுத்து வரும் பத்திரப்பதிவு துறை, ஒரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.. என்ன அது?
தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன.. இதன் மூலம் வீடு, நிலங்கள் உள்பட பல்வேறு தொழில் சம்பந்தமான பத்திரப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன.
ஆவணங்கள்: வருடத்துக்கு குறைந்தபட்சம் 25 லட்சம் ஆவணங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. ஆனால், 3 வருடங்களுக்கு முன்பு, கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பத்திரப்பதிவுகள் குறைந்துவிட்டன. இதனால், வருமானமும் வெகுவாக குறைந்துவிட்டது.. இதையடுத்து, கடந்த வருடம் அதாவது 2022-ல் வரலாறு காணாத சாதனையை பத்திரப்பதிவு துறை நிகழ்த்தியிருந்தது.

பத்திரப்பதிவு: பத்திரப்பதிவுகள் மூலம் 2020-21ம் ஆண்டில் ரூ.13 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.10,643 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், கடந்த 2021-22ம் ஆண்டில், திமுக அரசு எடுத்த நடவடிக்கை, மற்றும், பத்திரம்பதிவு செய்த அன்றே பத்திரங்கள் திருப்பி தரப்பட வேண்டும் என்றும்,, நிலுவையில் உள்ள ஆவணங்களை குறைப்பு உள்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் நடவடிக்கைள் பதிவுத்துறை ஐஜி சிவன் அருளால் எடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கடந்த வருடம், பதிவுத்துறை மூலம் வரலாறு காணாத அளவில் அரசுக்கு வருமானம் கிடைத்திருந்தது.. 2022-ம் வருடம் கடந்த பிப்ரவரி மாதம் வரை ரூ.12096.36 கோடி வருவாய் எட்டியிருந்தது.. இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையை பதிவுத்துறை படைத்திருந்தது. இப்போது அடுத்த சாதனையை பதிவுத்துறை எட்டிவிட்டது.
இதுகுறித்து பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலா சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, பத்திர பதிவுத்துறையின் வருவாய் வசூலில் தொடரந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.17 ஆயிரத்து 253 கோடி வருவாய் ஈட்டப்படு சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மொத்த வருவாய்: கடந்த நிதியாண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் நிகழாண்டின் அதே காலத்தில் கூடுதலாக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டின் ஜூலை வரையிலான காலத்தில் ஈட்டப்பட்ட மொத்த வருவாய் ரூ.5 ஆயிரத்து 539,06 கோடியாகும். நிகழ் நிதியாண்டில் ஜூலை மாதம் வரையில் ரூ.5 ஆயிரத்து ரூ.611.47 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரப்பதிவு துறையில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதையடுத்து, வரும் 2023 - 24 நிதியாண்டுக்குள், 20,000 கோடி வருவாய் ஈட்ட, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். இந்த இலக்கையும் எட்டிப்பிடித்துவிட பத்திரப்பதிவு துறை ஆர்வம் காட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications