Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலத்தில் போலி பத்திரம்? மோசடி பத்திரங்களை இனி ஐ.ஜி.யே ரத்து பண்ணலாம்! வருகிறது மத்திய அரசு சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: போலி ஆவணம், ஆள் மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை ரத்து செய்ய முடியும். உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க மோசடியாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், மோசடி பத்திரங்களை ஐஜி ரத்து செய்ய மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய பதிவு சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கே பார்ப்போம்..

எந்தவொரு நிலத்தை வாங்குவதற்கும், விற்பதற்கும், பத்திரங்கள் கட்டாயமாகிறது.. எனவேதான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்களை போலவே உருவாக்கி மோசடிகள் அதிகரித்து வருகிறது.

Registration Department fraudulent securities Fake documents

போலியான ஆவணங்கள்

ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள், ஏதாவது கண்டறியப்பட்டால், சார் பதிவாளரோ, பத்திரப்பதிவு ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி, கோர்ட்டின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.. அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் ஹைகோர்ட்டுக்கு மட்டுமே இருந்துவந்த நிலையில், இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு காரணம், மோசடி பத்திரங்களை ரத்து செய்வதில் அபரிமிதமான தாமதம் ஏற்படுவதாக கருதப்பட்டது. எனவே, எங்காவது பத்திர மோசடி தென்பட்டால், பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச்சட்ட மசோதா, கடந்த 2022 ஆகஸ்ட் 16 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது..

1100 பத்திரங்கள்

இதற்கு பிறகு, பதிவாளர்கள் விசாரணை அடிப்படையில், 1,100 பத்திரங்கள் ரத்து செய்யப்பட்டன. எனினும், இந்த புதிய சட்டத்திருத்தம் வருவதற்கு முந்தைய காலத்தில் நடந்த மோசடிகளையும் விசாரிக்க முடியுமா? என்ற குழப்பம் எழுந்தது.. இந்த விவகாரம் நீதிமன்றம் வரையும் சென்றது..

இதனை விசாரித்த சென்னை ஹைகோர்ட், சட்டத்திருத்தம் அமலாகும் தேதி குறித்த தெளிவு இல்லாததால், அதற்கு தடை விதித்தது. இதனால், மோசடி பத்திரங்கள் குறித்த புகார்கள் பெறுவதும், விசாரணை நடத்துவதும் நிறுத்தப்பட்டது..எனவே, இந்த விவகாரத்தில், ஏற்கனவே மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த உத்தரவுகள் தொடர்பான மேல் முறையீட்டை, பதிவுத்துறை ஐ.ஜி., விசாரிப்பதும் நிறுத்தப்பட்டது.

மீண்டும் கிளம்பிய சந்தேகம்

இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த ஹைகோர்ட், மோசடி புகார் அடிப்படையில், மாவட்ட பதிவாளர்கள் பிறப்பித்த ரத்து ஆணையை நீக்கி உத்தரவிடவும், 1,100 பத்திரங்களுக்கான ரத்து ஆணையும் நீக்கப்படுமா? என்ற சந்தேகம் கிளம்பியது.

இந்நிலையில், 1908ம் ஆண்டு பதிவு சட்டத்துக்கு மாற்றாக, 2025ம் ஆண்டு பதிவு சட்டம் என்ற புதிய சட்டத்தை, மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது.. இது தொடர்பாக மக்கள் கருத்து தெரிவிக்க வேண்டும் என்பதற்காக இதன் வரைவு ஆவணத்தை, மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.. இதற்கு பொது மக்களுக்கு 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டும், கருத்து தெரிவிக்க அழைப்பும் விடப்பட்டுள்ளது.

புதிய சட்ட வரைவு ஆவணம்

பத்திரப்பதிவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைந்து தீர்வு கிடைக்க, புதிய பிரிவுகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.முக்கியமாக, புதிய சட்டத்தின் வரைவு ஆவணத்தில், 64வது பிரிவில் பத்திரங்களை ரத்து செய்வதற்கான நடைமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.

இதில் தவறான தகவல்கள் அடிப்படையில் பதிவான பத்திரங்களை ரத்து செய்யலாம் என்றும், பதிவுத் துறை ஐஜி இதற்கான அதிகாரம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தவறான தகவல்கள் அடிப்படையில் தாக்கலாகும் பத்திரங்களை ரத்து செய்ய, சார் - பதிவாளர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சட்டம் அமலாகும்பட்சத்தில், மோசடி பத்திரங்களை ரத்து செய்ய, கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்கிறார்கள் பதிவுத்துறை அதிகாரிகள் தரப்பில்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+