“1,60,000 ரூபாய் செலவு இனி, 80 ஆயிரமாகக் குறையும்” - பத்திரப் பதிவர்கள் சொல்லும் ‘குட் நியூஸ்’
தமிழ்நாட்டில் பத்திர பதிவு கட்டணத்தை 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆகக் குறைக்கப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்றைய பட்ஜெட் உரையில் கூறினார்.
சென்னை: நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்கும் விதமாக, பத்திரப் பதிவுக் கட்டணத்தை 4% இல் இருந்து 2% ஆகக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நேற்று தனது 2023-24 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை உரையின்போது அறிவித்தார்.
இது தொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில், " 01.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு, 09.06.2017 அன்று முதல் ஒரே சீராக 33 சதவீதம் குறைக்கப்பட்டது.

மேலும், விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சந்தை மதிப்பிற்கு ஏற்ப வழிகாட்டி மதிப்பை உயர்த்தவும், பதிவுக் கட்டணத்தைக் குறைக்கவும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கோரிக்கைகளை ஏற்று, வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது.

இக்குழு நில அளவை எண் வாரியாக திருத்தம் மேற்கொள்ளக் கால அவகாசம் தேவைப்படும். ஆகவே, வெளிச்சந்தையில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதால், இக்குழுவின் அறிக்கை பெறும்வரை, வழிகாட்டி மதிப்பை 08.06.2017 வரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
நிலம் வாங்குபவர்களின் சுமையைக் குறைக்க, பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இனி சொத்து விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் ஆகிய ஆவணங்களுக்கு, 8-6-2017 வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும்' என விளக்கம் அளித்திருந்தார்.

இந்த அறிவிப்பைப் பலரும் வரவேற்றுள்ளனர். இந்தத் துறையில் பல ஆண்டுகளாக உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிலரைக் கேட்டோம்.
பத்திரப் பதிவு செயலாளர் பழனியப்பன், "ஒருவர் 40 லட்சம் போட்டு சொத்தை வாங்கினால், முன்பு 1லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பத்திரப் பதிவுக்கே செலவாகும். இப்போது 4% இல் இருந்து 2% ஆக பத்திரப் பதிவு கட்டணத்தை அரசு குறைத்துள்ளது.

இதனால், அதே 40 லட்ச ரூபாய் சொத்துக்கு இப்போது 80 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும். இந்தளவுக்குக் கட்டணத்தைக் குறைத்துள்ளதால் மக்கள் அதிகமாகச் சொத்துகளை வாங்க முன்வருவர். அத்துடன் ரியல் எஸ்டேட் தொழில் கூடுதலாக வளர்ச்சி அடையும்" என்கிறார்
சேலத்தைச் சேர்த்தவர் "இன்றைக்கு ஏழை மக்கள் வீடு, மனை வாங்க வேண்டும் என்றால் முன்பு பத்திரப் பதிவுக்கே அதிக தொகை செலவு செய்ய வேண்டி இருந்தது. இந்தத் தொகை 2% ஆகக் குறைக்கப்பட்டது பெரிய விஷயம். இதனால் ஏழை மக்கள் அதிகம் பயன்பெறுவர்" என்கிறார்.
ஆவண எழுத்தாளர், கார்த்திகேயன், "முன்பு ஒரு லட்ச ரூபாய் சொத்துக்கு 40 ஆயிரம் ரூபாய் பதிவுக் கட்டணம் இருந்தது. இப்போது அதே தொகையான சொத்துக்கு 20 ஆயிரம் இருந்தாலே பதிவு செய்யலாம். இது மக்களுக்கு எவ்வளவு பெரிய லாபம் தெரியுமா?
இதனால் ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும். அரசுக்கும் லாபம் வரும். பத்திரப் பதிவின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூடும். அல்லது 100 சதவீதமாகக் கூட அதிகரிக்கலாம். இந்த அரசு திறம்படச் செயல்படுகிறது அதற்கு இதுவே உதாரணம். இந்த அரசிற்கு இது மேலும் ஒரு மைல்கல்" என்கிறார்

ராஜேந்திரன் சென்னை, "இந்தக் கட்டணக் குறைப்பு சிறிய அளவில் நிலத்தைப் பதிவு செய்பவர்களுக்கு நன்மையாக அமையும். 1200 சதுர அடி அல்லது 600 சதுர அடி எனப் பதிவு செய்பவர்கள் அதிகம். அவர்களால் முன்பு இருந்த கட்டணத்தைத் திரட்டுவது கடினம். இப்போது அந்தப் பதிவு தொகை அப்படியே இரண்டு மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. இதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்" என்கிறார்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன், சென்னையைப் பொறுத்தவரைப் பல பகுதிகளில் நிலம் வாங்குவது பெரிய கனவாக உள்ளது. ஏனெனில் நில வழிகாட்டி மதிப்பீடு என்பது பெரிய விலையில் உள்ளது. அதை வாங்கி பதிவு செய்வது என்பது கஷ்டமாக உள்ளது.

ஆகவே பத்திரப்பதிவு கட்டணத் தொகை குறைத்துள்ளது நல்ல முடிவு. இதனால் நிலப் பதிவு செய்யாமல் தேங்கிக் கிடக்கும் நிலங்களைப் பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் முன்வருவார்கள்" என்கிறார்
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications