ஓபிஎஸ்ஸிடம் தமிழ் எழுத பணியாற்றியிருக்கிறேன்.. மிகவும் அமைதியான நபர்.. ரேகா நாயர் பேட்டி
சென்னை: நான் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸுடன் நிறைய நாள் இருந்திருக்கிறேன். அவர் மிகவும் அமைதியானவர் என நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ளார். இவரது பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தவர் ரேகா நாயர். இவர் சீரியலில் நடித்ததை விட நடிகை சித்ரா உயிரிழந்த போது அவரது மரணம் குறித்தும் அவருடைய கணவர் ஹேமந்த் குறித்தும் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அவர் மீடியா வெளிச்சத்திற்கு வந்தார். இவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்த போதிலும் சரியான வாய்ப்பு வராமல் சைடு கேரக்டர்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் இவருக்கு இரவின் நிழல் என்ற படம் புகழை தந்தது.
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தில் இவர் அரை நிர்வாணமாக நடித்திருந்தார். இது பெரும் பேசும் பொருளானது. ரேகா நாயர் நடித்திருந்த காட்சிகளை பயில்வான் ரங்கநாதன் தரக்குறைவாக விமர்சித்திருந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்த ரேகா நாயர் அவரை எங்கு பார்த்தாலும் அடிப்பேன் என பேட்டி அளித்திருந்தார்.
அந்த வகையில் பயில்வானை திருவான்மியூர் கடற்கரையில் வைத்து கடுமையாக சண்டையிட்டார் ரேகா நாயர். மேலும் அவரை அடிக்கவும் பாய்ந்தார். அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் ரேகாவை தடுத்து நிறுத்தினர். மேலும் ஒரு விழாவில்கூட ரேகா நாயர் பேசுகையில் பயில்வான் ரங்கநாதன் செத்தால் அன்று நான் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அண்மையில் கூட எனக்கு திருமணம் ஆகவில்லை எனறால் நிச்சயம் நடிகர் தனுஷை திருமணம் செய்திருப்பேன் என பேசியிருந்தார். மேலும் தனுஷ் மீதான காதலையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு பரபரப்பான பேட்டிகளை அளித்து வரும் ரேகா நாயர் அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்தும் பேசியுள்ளார்.
அந்த வகையில் அவர் ஓபிஎஸ் குறித்து பேசியிருந்தது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் ரேகா நாயர் கூறுகையில் ஓபிஎஸ் கூட நிறைய நாள் இருந்திருக்கேன். ஓபிஎஸ் கட்சியிலிருந்து விலகிய போது அவருக்கு தமிழ் எழுதுவதற்கு ஒருவர் மூலம் எனக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து அவரிடம் பணியில் சேர்ந்தேன். பல நாட்கள் காலை சென்றுவிட்டு மாலை வரை அவரது வீட்டில் பணியாற்றிவிட்டு வருவேன். அவர் மிகவும் அமைதியான மனிதர். இவ்வாறு ரேகா நாயர் தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications