சேலம் Ex மேயர் ரேகா பிரியதர்ஷினிக்கு கிடைத்த ஜாக்பாட்! தேடி வந்த அரசுப் பதவி! 3 ஆண்டுகள் கையில் பவர்
சென்னை: சேலம் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், திமுக முக்கிய பெண் பிரமுகருமான ரேகா பிரியதர்ஷினிக்கு அரசுப் பதவி ஒன்றைக் கொடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரேகா பிரியதர்ஷினி அடுத்த 3 ஆண்டுகள் இந்த பதவியில் தொடர்வார். இதனிடையே இந்த இடத்தைக் கைப்பற்ற திமுகவில் ஏராளமான நிர்வாகிகள் போட்டி போட்ட நிலையில் ரேகா பிரியதர்ஷினிக்கு ஜாக்பாட் கிடைத்திருக்கிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' என்கிற புதிய அமைப்பு ஒன்று தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிக்கப்பட்டு அதற்கான உரிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்' 2021 அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வந்தது.
இவ்வாணையம் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி P.R.சிவகுமார் தலைமையில் செயல்பட்டு வருகிற நிலையில் தற்போது காலியாக உள்ள ஒரு உறுப்பினர் பணியிடத்தில் J.ரேகா பிரியதர்ஷினியை நியமனம் செய்து அரசு ஆணையிட்டுள்ளது. மேலும், புதிததாக நியமனம் செய்யபட்ட உறுப்பினரின் பதவி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.












Click it and Unblock the Notifications