சென்னையை தலைகீழாக மாற்ற போகும் திட்டம்.. உள்ளே வரும் அம்பானி.. ஆஹா அடிச்சதுங்க ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மிகப்பெரிய கவனம்பெற போகும் முதலீடு ஒன்றை மேற்கொள்ள போவதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்து உள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் முதல் மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவின் கட்டுமானத்தை ஜூன் மாதம் சென்னைக்கு அருகிலுள்ள மப்பேடுவில் தொடங்க உள்ளது. இது 12 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட திட்டம். தற்போது செயல்பாட்டிற்கு வர உள்ளது.

chennai

இந்த திட்டத்திற்கு ஆரம்ப பின்னடைவுகள் இருந்தபோதிலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 1,424 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 184.27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், தற்போது தொடங்கத் தயாராக உள்ளது. இது தென் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்பானி முதலீடு; ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவிற்கான ஏலத்தை 2022 இல் வாங்கியது. அதானி குழுமத்தை விஞ்சி இந்த முதலீட்டை அம்பானி வென்றார்.. சரக்கு வர்த்தகம், விநியோகம், சரக்கு பரிமாற்றம், வரிசைப்படுத்துதல் மற்றும் மீண்டும் பேக்கிங் செய்தல் உள்ளிட்ட முக்கியம் , மிகப்பெரிய தளவாட சேவைகளை வழங்குவதை இந்த பூங்கா நோக்கமாகக் கொண்டுள்ளது.

சரக்கு வர்த்தக சேவையில் அனைத்து படிநிலைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ளும் விதமாக இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளது.

எங்கே அமைக்கப்படும்?: சென்னை துறைமுகத்தில் இருந்து 52 கிமீ தொலைவிலும், எண்ணூர் துறைமுகத்தில் இருந்து 80 கிமீ தொலைவிலும், காட்டுப்பள்ளி துறைமுகத்திலிருந்து 87 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த பூங்கா தென்னிந்தியாவின் மத்திய தளவாட மையமாக மாற உள்ளது. ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பூர் மற்றும் பெங்களூருவில் உள்ள இரண்டாம் நிலை சந்தைக் நகரங்களுக்கு எளிதாக பொருட்களை கொண்டு செல்லும் விதமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது .

1,424 கோடி ருபாய் செலவில் இந்த வருகிறது. இந்த பூங்கா அடுத்த 45 ஆண்டுகளில் தோராயமாக 7.17 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மப்பேட்டில் இருந்து துறைமுகங்களுக்கு ரயில் இணைப்பை உறுதி செய்வதே திட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்கிறார்கள். இது ஸ்ரீபெரும்புதூர்-ஒரகடம் தொழிற்பேட்டை மற்றும் சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடுக்கு அருகில், குறிப்பிடத்தக்க ஆட்டோமொபைல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி கிளஸ்டர்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

பாலம் வருகிறது: இந்த பகுதியில் போக்குவரத்தை எளிதாக்கும் விதமாக மதுரவாயல் - துறைமுகம் பாலம் திட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கிய நிலையில் தற்போது தீவிர வேகத்தில் பணிகள் நடக்கின்றன. முதல்முறையாக மதுரவாயல் சாலையில் பேரிகேட் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பின் அந்த பில்லர்கள் இடிக்கப்படும்.

இன்னொரு பக்கம் இதற்காக தற்போது கூவத்தில் குழிகள் தோண்டி தூண்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. 14 ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த திட்டத்தில் உச்சபட்ச வேகத்தில் சென்று கொண்டு இருக்கின்றது. இதற்கான டெண்டர் விடப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்து பணிகள் தொடங்கி உள்ளன.

சென்னையில் தற்போது பல்வேறு பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சாலைகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. புதிய சாலைகள் போடப்பட்டு வருகின்றன. சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரை கூட பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளன.

இந்த நிலையில்தான் இன்னொரு பக்கம் மதுரவாயல் பாலத்திற்கான கட்டுமானம் தொடங்கி உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி மூலம் 2009ல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் கருணாநிதியின் கனவு திட்டமாக இது இருந்தது. ஆனால் 14 வருடங்களாக இந்த திட்டம் தொடங்கப்படாமல் முடக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+