நிலம் விடுவிப்பு.. சிறிய நிலத்தை வைத்திருந்தாலும் கட்டணம்? இந்தா, ஹென்றி கோட்டைக்கு கிளம்பிட்டாருல்ல
சென்னை: பொதுமக்களுக்கான மகத்தான திட்டத்தையும், ஆகச் சிறந்த அரும்பெரும் திட்டத்தையும் தொடர்ந்து நிறைவேற்றி வரும் தமிழக அரசுக்கும், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைக்கும், பெயிரா தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளது... அதுமட்டுமல்ல, மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் ஒரு முக்கிய கோரிக்கையை பெயிரா விடுத்திருக்கிறது. அது என்ன?
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட மற்றும் கையகப்படுத்த திட்டமிட்ட நிலங்களை விடுவித்து தீர்வு ஏற்படுத்தியமைக்கு, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வீட்டுவசதி துறைக்கும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, மனம் திறந்த பாராட்டுக்களையும், நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்: அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த, பொதுமக்கள் தினம் தினம் சந்தித்து வந்த பெரும் பிரச்சனையை தாய் உள்ளத்தோடு தங்களின் சீரிய தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு அரசும், குறிப்பாக தங்களின் ஆலோசனையை பெற்று, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையும் மக்களுக்கான மகத்தான திட்டத்தையும், ஆகச் சிறந்த அரும்பெரும் திட்டத்தையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
மேற்கண்ட திட்டம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.. வீட்டுவசதி வாரிய நில எடுப்பு பிரச்சனைக்கு விலக்களித்து தீர்வினை ஏற்படுத்தியமைக்கு, அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பிலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சார்பிலும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.
நில எடுப்பு சட்டம்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தை பொறுத்தவரை, பொதுமக்களின் வீட்டுவசதி தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு கடந்த 1961 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு, சென்னை மற்றும் பிற நகரங்களில் நில எடுப்பு சட்டத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தி வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மற்றும் கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களுக்கு, நீண்ட காலமாக தீர்வு செய்து தரக் கோரி, எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பும், பாதிக்கப்பட்ட பொது மக்களும் வீட்டுவசதி வாரியத்திடம் தொடர்ந்து தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் மற்றும் நிலம் மறுமாற்றளிப்பு கோரியும் கோரிக்கை வைத்து வந்தோம்.
சிறப்பு புகார் பெட்டி: இந்நிலையில் எங்களின் கோரிக்கையின் அடிப்படையில் முதல்வரின் முன்னெடுப்புத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகங்களில் சிறப்பு புகார் பெட்டிகளை அமைத்து நிலஎடுப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட பொது மக்களிடம் இருந்து 4488 மனுக்களை பெற்றது.
இம்மனுக்களுக்கு தீர்வு காணும் விதமாக, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் சார்பில் கடந்த 10.10.2023 அன்று அரசாணை எண்.136/2023 இன் மூலம் நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்து தீர்வுகாண ஆணையிட்டது.
சுவாதீனம்: இக்குழு பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை வகைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு அவற்றினை, 4 (1) அறிவிக்கை ரத்து செய்யப்பட்ட இனங்கள், பிரிவு 6ன் கீழான வரைவு விளம்பல் ரத்து செய்யப்பட்ட இனங்கள், தீர்வானம் பிறப்பிக்கப்பட்டு வாரியம் வசம் ஒப்படைப்பு செய்யப்படாத நிலங்கள், சுவாதீனம் பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படாத இனங்கள், திட்டம் செயல்படுத்தப்பட்ட இனங்கள் என்ற 5 இனங்களாக வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வகைப்படுத்தி அதற்கு தீர்வு கண்டுள்ளது.
முதற்கட்டமாக மேற்கண்ட முதல் 2 வகைபாடுகளில் அமைந்துள்ள நிலங்கள் சம்பந்தமாக, பொதுமக்களால் அரசுக்கு கொடுக்கப்பட்ட மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
பெயிரா விடுத்த கோரிக்கை: அதன் அடிப்படையில் முதற் கட்டமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், கரூர், தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், விழுப்புரம், கடலூர், கோயம்புத்தூர், திருவள்ளுர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள 2002.21 ஏக்கர் நிலங்களை, எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் பொது மக்களின் கோரிக்கைகளுக்கேற்ப, மேற்கண்ட முதல் இரு வகைபாடு உள்ள நிலங்களை வீட்டுவசதி வாரியத்தில் இருந்து விடுவித்து விலக்களிக்க சிறப்புக் குழு அரசிற்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் சார்பில் சுற்றறிக்கை மற்றும் அரசாணைகள் வெளியிட்டு வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்திய மற்றும் திட்டமிட்ட நிலங்களை, நில எடுப்பிலிருந்து விலக்களித்தும் ஆணையிட்டுள்ளது.
குறைந்தபட்ச கட்டணம்: ஒருவேளை தாங்கள் மேற்கண்ட வகையில் வரிசையாக வகைப்படுத்தி உள்ள இனங்களில், இனம் 4 மற்றும் 5 ஆகியவற்றில் சிறிய அளவில் நிலங்களை வைத்திருக்கும் பொதுமக்கள் வாரியத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்ச கட்டணத்தை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்" என்று பெயிரா ஹென்றி தன்னுடைய வேண்டுகோளை அந்த கடிதத்தில் பதிவு செய்துள்ளார்.
வழக்கம்போல், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, அடுத்த வேண்டுகோளை தற்போது பெயிரா விடுத்திருக்கும் நிலையில், இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார் என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications