ரெம்டெசிவிர் விற்பனை மையங்களை அதிகப்படுத்துங்கள் - தமிழக அரசுக்கு கமல் கோரிக்கை
ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
கொரோனா தொற்றின் லேசான பாதிப்புக்குள்ளானவர்களுககு ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை உயிர்காக்கும் மருந்தாக மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைகளின் மருந்தகங்களில் ரெம்டெசிவிர் மருந்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்து விற்பனையகங்கள், அதன் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது. கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து ரெம்டெசிவிர் மருத்து வாங்கவேண்டியிருப்பதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள, உயிர் காக்கும் மருந்தகத்தில், ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மருந்து வாங்குவதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். டோக்டன் மூலமும் மேலும், ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்து வரும் அரசின் உயிர் காக்கும் மருந்தகங்களை பிற மாவட்டங்களிலும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.
இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், "ரெம்டெசிவிர் மருந்து விற்கும் மையங்களில் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள். விற்பனை நேரத்தை அதிகரிக்க வேண்டும். விற்பனை மையங்களின் எண்ணிக்கையையும் உடனடியாக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications