ரேஷன் அட்டைதாரர்களுக்கு குஷி.. ரேசன் அட்டையை புதுப்பிக்கணுமா? தமிழக அரசின் டபுள் குட்நியூஸ் பாருங்க
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 முக்கிய செய்தியை தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியையும் பரவலாக ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

பாமாயில்: அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, வரும் 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, ரேஷன் கடைகளில், கருவிழி சரிபார்ப்பு திட்டமும் விரைவில் செயல்படுத்தப்போவதாகவும் தெரிகிறது. இந்நிலையில், ஒரு முக்கியமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. சட்டசபையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னதுரை பேசும்போது, ''ரேஷன் கடைகளில் பொருட்களை பெற வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை வைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்" என்றார்.
ஆன்லைன் வசதி: உடனே இதற்கு பதிலளித்த, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மத்திய அரசு வாயிலாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதற்காக குடும்ப உறுப்பினர்கள் விபரங்களை புதுப்பிக்க ஆன்லைனில் வசதிகளும் செய்யப்பட்டிருக்கின்றன..
அதன்படி, ரேஷன் கடைகளில், கைரேகை, கருவிழி பதிவு ஓரளவு முடிந்துள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் ஓய்வாக இருக்கும்போதும், பொருட்களை வாங்க வரும்போதும், இந்த பணியை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சில ரேஷன் கடைகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் வரவேண்டும் என்று தவறுதலாக சொல்லப்பட்டுள்ளது.. அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று
அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.. குடும்ப உறுப்பினர்களின் தகவல்களை புதுப்பிக்க தனி முகாம்கள் நடத்தப்படும்... தேவைப்பட்டால், அலுவலர்கள் வீட்டிற்கே சென்று புதுப்பிக்கும் பணியை மேற்கொள்வார்கள்" என்றார் அமைச்சர்.
டபுள் குஷி: ரேஷனுக்கு அனைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் செல்ல தேவையில்லை என்பதுடன், கார்டுகளை புதுப்பிக்க தனி முகாம்கள் நடத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு நிம்மதியை தந்து வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications