அடையாளமே மாறும் சென்னை பூங்கா ரயில் நிலையம்.. மின்சார ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
சென்னை: நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயில் சென்னையில் பல்வேறு ரயில் நிலையங்கள், மதுரை ரயில் நிலையம் உள்பட மொத்தம் 115 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரையில் 85 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தெற்கு ரயில்வேயில் 115 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. தெற்கு ரயில்வேயில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மொத்தம் 90 ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளன. இதில், முதல் கட்டமாக 18 ரயில் நிலையங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டினார்.

அம்ரித் பாரத் திட்டத்தில் தமிழக ரயில் நிலையங்கள்
தற்போதைய நிலையில், சென்னை கடற்கரை, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, கும்பகோணம், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, பழனி, கோவில்பட்டி, ராமநாதபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, செங்கோட்டை, மாம்பலம், குறும்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
அம்ரித் பாரத் திட்டத்தில் என்னென்ன பணிகள்
இந்தத் திட்டத்தின் படி, ரயில் நிலையங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது, பயணிகளுக்கு நவீன வசதிகளை வழங்குவது, மற்றும் நகரின் இருபுறமும் உள்ள பகுதிகளுடன் ரயில் நிலையங்களை இணைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பயணிகள் காத்திருப்பு அறைகள், கழிப்பறைகள், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர்கள், உள்ளூர் தயாரிப்புக்கான கடைகள் போன்ற வசதிகள் மேம்படுத்தப்படுகிறது.
17 ரயில் நிலையங்கள்
உள்ளூர் ரயில் நிலையங்களை பொறுத்தவரை சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, 2 ரயில் நிலையங்கள் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. எஞ்சிய ரயில் நிலையங்கள் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பூங்கா ரயில் நிலையம்
குறிப்பாக சொல்வது என்றால், சென்னை கோட்டத்தில் பூங்கா ரயில் நிலையம் மிகவும் முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதுதான் லோக்கல் ரயில் நிலையங்களிலேயே மிக முக்கியமான ரயில் நிலையம் ஆகும். சென்னை சென்ட்ரலில் உள்ள இந்த பூங்கா ரயில் நிலையம் ரூ.10.68 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
85 சதவீத பணிகள் நிறைவு
இங்கு பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.. அதன்படி, நுழைவு வாயில் புதுப்பித்தல், முன்பதிவு அலுவலகம், நடைமேம்பாலம் தளம் சீரமைப்பு, நடைபாதைகள், பார்க்கிங் வசதி, புதிய நடைமேடை மேற்கூரைகள், லிப்ட் உள்பட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போது பூங்கா ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி முடியும் தருவாயில் உள்ளதாகவும், விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர் தற்போது. பூங்கா ரயில் நிலையத்தை பொறுத்தவரையில் தற்போது 85 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் இந்த மாதம் இறுதிக்குள் முடிவடையும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications