வாடகை அல்லது லீஸ் வீட்டுக்கு போறீங்களா.. வாடகைதாரர்கள் அறிய வேண்டியவை என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வாடகை அல்லது லீசுக்கு வீட்டுக்கு போகும் போதும், வீட்டை லீசுக்கு அல்லது வாடகைக்கு விடும்போதும் இந்த தவறுகளை யாரும் செய்ய வேண்டாம் என்று வழக்கறிஞர்கள் மற்றும் அனுபவஸ்தர்கள் சில தகவல்களை கூறுவது வழக்கம். அவை என்ன..? அதனை இப்போது பார்ப்போம்.

பொதுவாக லீஸ் அல்லது வாடகை ஒப்பந்தம் என்பது 11 மாதங்கள் தான் போடப்படுகிறது. ஏன் அப்படி போடுகிறார்கள் என்றால் 11 மாதங்களுக்கு மேல் வரை கட்டாயம் பத்திரமாக பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் 12 மாதம் என்றால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் இருந்தது அப்படி நீங்கள் வீட்டை வாடகை அல்லது ஒத்திக்கு வீட்டு 12 மாதங்களாக பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டணத்தை முத்திரைத்தாள் கட்டணமாக கட்ட வேண்டியது இருந்தது.

Rental Agreement : Lawyers explained about who bears the cost of paint and pipeline for the rented house

இதன் காரணமாகவே பலர் 11 மாதம் என்கிற கட்டுப்பாட்டில் ஒப்பந்தம் போட்டு வந்தார்கள். இந்த நடைமுறை கடந்த 2019ம் ஆண்டே மாறிவிட்டது. இதன்படி 11 மாதம் என்று லீஸ் அல்லது வாடகை ஒப்பந்தம் போட சொன்னால் அதை ஏற்காதீர்கள். எத்தனை ஆண்டுகளோ அத்தனை ஆண்டுகள் லீஸ் அல்லது வாடகை ஒப்பந்தத்தை தெளிவாக குறிப்பிடுங்கள்.

ஏனெனில் நீங்கள் ஒப்பந்தத்தை அரசிடம் பதிவு செய்தால் மட்டுமே வாடகைக்கு அல்லது லீஸ்க்கு வந்த வீட்டில் பிரச்சனை என்றால் நீதிமன்றத்தில் முறையிட்டு நிவாரணம் பெற முடியும். அதேபோல் லீஸ் அல்லது வாடகைக்கு விடும் ஓனர்களுக்கு தீர்வினை நீதிமன்றம் மூலம் பெற முடியும்.

எப்படி என்றால், அதிக வாடகை ஏற்றினாலோ, வீட்டின் பராமரிப்பு செலவுகளை கண்டபடி கேட்டாலோ உங்களால் தீர்வு காண முடியாது. அதேபோல் பராமரிப்பு பணிகளை வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொள்ள மறுத்து உங்கள் தலையில் அந்த செலவை கட்டினால் உங்களால் அதற்கு சட்ட ரீதியாக நிவாரணம் பெறுவது கடினமாகிவிடும்.

அதேபோல் வீட்டிற்கு வந்தவர் , உரிய வாடகை தர மறுப்பது, காலி செய்ய மறுப்பது, வீட்டில் தேவையற்ற சண்டைகள் போடுவது, வீட்டை மோசமாக பராமரித்து பெரிய பிரச்சனையை ஏற்படுத்துவது போன்ற செயல்களை செய்யும் போது, அவர்களை காலி செய்ய வைக்க முடியாது. அதேபோல் லீசுக்கு வந்தவர்கள் வீட்டை மோசமாக மாற்றிவிட்டு முழு பணத்தை கொடுத்தால் தான் காலி செய்வேன் என்று பிரச்சனை செய்யும் போது, நிவாரணம் பெறுவதும் வீட்டின் உரிமையாளர்களுக்கு சவாலானதாக இருக்கும்.

எனவே வீட்டிற்கு குடிபோகிறவர்கள், வீட்டை லீசுக்கு அல்லது வாடகைக்கு விடுவோர் கண்டிப்பாக ஒப்பந்தம் போட்ட உடன் கையோடு அதனை அரசின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்படி பதிவு செய்துவிட்டால், பின்னாளில் பிரச்சனை வந்தால் நீதிமன்றத்தில் போய் நிவாரணம் பெற முடியும்

அதேபோல், வாடகை அல்லது லீஸ் ஒப்பந்தம் போடும் போது எந்தெந்த பணிகளை யார் மேற்கொள்வது என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். பெயிண்டிங், வயரிங், வீட்டு ஜன்னல் கதவு, வாஷ் பேசின், கழிவறை பேஷன்கள், ஏசி ஸ்விட்ச்கள், வீட்டின் டைல்ஸ் உடைந்தால் யார் ஒட்டுவது, பொது மோட்டார் பராமரிப்பு, கழிவுகள் வெளியேற்றும் கட்டணம் என எல்லா வகையான பராமரிப்பையும் யார் யார் மேற்கொள்வது என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்..
அதேபோல் ஒரு வேளை வீடு பிடிக்கவில்லை.. வீட்டில் குடியிருப்போரை பிடிக்கவில்லை என்றால் 4 மாதம் நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பதை ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஒப்பந்தத்தை வீட்டின் உரிமையாளர் மற்றும் வீட்டில் குடியிருப்போர் என இருவர் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தனியார் நிறுவனத்திடம் வீட்டை ஒப்படைத்துவிட்டு அவர்களிடம் லீஸ் அல்லது வாடகை ஒப்பந்தம் போடுவது வீட்டின் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல வீட்டில் குடிவருபவருக்குமே பெரிய சிக்கலாக முடியும். இதேபோல் வீட்டின் உரிமையாளர் யார் என்பதை தெளிவாக அறிந்து ஒப்பந்தம் போடுங்கள். இதில் ஏமாந்துவிட வேண்டாம்..

அதேபோல் ஒருவேளை வீட்டை காலி செய்து சென்றால் வீட்டின் உரிமையாளரால், பணத்தை திரும்ப தரமுயுமா என்பதை அறிந்து செல்லுங்கள். அதேபோல் வீட்டில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்பதையும், தண்ணீர், வீட்டின் சுவர், பராமரிப்பு என எல்லா பிரச்சனையும் முழுமையாக அறிந்த பின்னர் ஒப்பந்தம் போடுங்கள். அவசரப்பட்டு ஒப்பந்தம் போட்டு பின்னாளில் அவதிப்பட வேண்டாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+