திருந்தாத திருத்தணி.. சுராஜ் ரத்தமே இன்னும் காயலை! அதுக்குள்ள ஜமாலுக்கு அடி.. பதற வைக்கும் வீடியோ!
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஓடும் ரயிலில் பயணித்த வட மாநில இளைஞரை கொடூரமாக தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து முழுவதற்குள் திருத்தணியில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பட்டுப்புடவை வியாபாரி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் ஒடிசாவைச் சேர்ந்த சுராஜ் என்ற இளைஞர் மின்சார ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது பட்டாக்கத்தி வைத்து அந்த இளைஞரை மிரட்டியவாறு நான்கு பேர் ரீல்ஸ் எடுத்தனர்.
அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் ரயிலில் இருந்து இறக்கிய கும்பல் அப்பகுதியில் வைத்து கொடூரமாக தாக்கியது. மேலும் அதனையும் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்ட நிலையில் கடும் கண்டனம் எழுந்தது.

திருத்தணி தாக்குதல்
இதை எடுத்து அவர்களை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தான் தனது சொந்த ஊருக்கு செல்வதாக கையெழுத்திட்டதாக போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அப்பகுதியில் அதிகரித்து வரும் போதை பொருள் மற்றும் ஆயுத பயன்பாடு காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்துள்ளது.
சுராஜ் தாக்குதல் வீடியோ
அதே நேரத்தில் அந்த இளைஞர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இல்லை எனவும், இருந்த போதும் இது தொடர்பாக விசாரித்து வருவதாக காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில் மீதான தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. திருத்தணி ரயில் நிலையத்தில் வியாபாரி ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கொடூரமாக தாக்கி இருக்கின்றனர்.
ரயில் தாக்குதல்
பட்டுப்புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஜமாலை மிக கடுமையாக தாக்கியுள்ளனர். அவரை காப்பாற்ற முயன்ற போது அங்கிருந்த பொது மக்களையும் அவர்கள் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து ரயில் நிலையத்திலிருந்து இழுத்துச் சென்று அவரை தாக்கி நிலையில் தகவல் இருந்து வந்த போலீசார் ஜமாலை மீட்டுள்ளனர். மேலும் அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மீண்டும் அதிர்ச்சி
திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அதே ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருப்பது பொதுமக்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது.
The wounds from the brutal attack on Suraj have not yet healed, and even before the conscience of the state could recover, Thiruttani witnessed yet another act of senseless violence yesterday. A local businessman, Jamal, was attacked by a group without provocation or cause.
— K.Annamalai (@annamalai_k) December 31, 2025
This… pic.twitter.com/a2jRgW4oDA
அண்ணாமலை
ஜமால் தாக்கப்பட்ட வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, பொதுமக்கள் தங்கள் உயிரை தாங்களாகவே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க இன்னும் எத்தனை சுராஜ், ஜமால்கள் தாக்கப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications