தமிழ்நாடு மாடல்.. இந்தியாவின் வளர்ச்சிக்கு இதுவே சூட்சுமம்.. அரவிந்த் சுப்ரமணியன் தந்த பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியப் பொருளாதாரத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு துறைகளில் தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. குறிப்பாக உற்பத்தித் துறையில் பல மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிறது. இதற்கிடையே தமிழக அரசு செய்வதை மற்ற மாநிலங்களும் செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் உற்பத்தித் துறையை மேம்படுத்த முடியும் என்றும் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


நமது நாட்டில் பொருளாதார ரீதியாக முன்னணியில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு இருக்கிறது. ஐடி, உற்பத்தி என பல்வேறு துறைகளில் தமிழ்நாடு டாப் இடத்தில் இருக்கிறது.

tamil nadu investment

பாராட்டு: அதிலும் குறிப்பாக கார் உள்ளிட்ட ஆடேமொபைல் உற்பத்தியில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகத் தமிழ்நாடு திகழ்கிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு அரசு செய்வதைச் செய்ய வேண்டும் என்றும் அப்போதே நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், முதலீடுகளை ஈர்க்க வெறுமன நல்ல கொள்கைகள் மட்டும் போதாது எனக் குறிப்பிட்ட அவர், பிஸ்னஸ் செய்யத் தேவையான சூழலை உருவாக்கினால் மட்டுமே முதலீடுகள் வரும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாகப் பிரபல ஆங்கில நாளேடான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அரவிந்த் சுப்ரமணியன் பேட்டியளித்துள்ளார்.

முக்கியம்: அதில் அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நல்ல உள்கட்டமைப்பு இருக்கிறது. மேலும், இங்கு எளிதாக வணிகம் செய்யச் சூழலும் இருக்கிறது. உதாரணமாகக் கடந்த 2021ஆம் ஆண்டில், ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேற முடிவு செய்தது. தமிழ்நாடு அரசும் நிலைமை உணர்ந்து, சிக்கலான தொழிலாளர் மற்றும் நில விவகாரங்களை எளிதாக முடித்துக் கொடுத்து ஃபோர்டு வெளியேற உதவியது.

ஃபோர்டு நிறுவனத்திற்கு இதனால் மகிழ்ச்சி.. தமிழ்நாட்டில் முதலீடு செய்தால் அபாயம் இருக்காது என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தது. இதன் காரணமாகவே மீண்டும் இந்தியாவில் அவர்கள் முதலீடு செய்ய முடிவு செய்தபோது, அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்வு செய்தனர். அதேபோல சமீபத்திய சாம்சங் நிறுவனத்தினர் நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தையும் சரியாகக் கையாண்டார்கள். தனியார் முதலீட்டை ஈர்க்க நல்ல கொள்கைகள் மட்டும் போதாது. நல்ல சூழலையும் உருவாக்க வேண்டும்" என்றார்.

இந்தியாவின் வளர்ச்சி: இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவர், "சீனாவை விட்டு வெளியேறும் நிறுவனங்களை நாம் ஈர்க்க வேண்டும். நாடு வளர, உத்தரப் பிரதேசம் வளர வேண்டும், பீகார் வளர வேண்டும். தனியார் முதலீடுகளை இந்த மாநிலங்கள் அதிகம் ஈர்க்க வேண்டும். இல்லையென்றால் இந்த மாநிலங்களின் வளர்ச்சி குறையும். இதனால் இந்தியாவும் வளர்ச்சியும் குறையும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பது மற்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து உதவுகிறது. ஆனால், மற்ற மாநில அரசுகள் தங்கள் சொந்த மக்களுக்கு இந்த வளர்ச்சியைத் தர வேண்டும். தமிழ்நாட்டு செய்வதை அதிக மக்கள்தொகை கொண்ட உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் செய்ய வேண்டும். அங்கு தான் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே உற்பத்தித் துறையில் தமிழ்நாடு வளர முடியும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+