பாரதம்.. ஆசிரியர் தின வாழ்த்திலேயே பற்ற வைத்த ஆளுநர்.. ட்விட்டரில் மாற்றிய அஸ்ஸாம் முதல்வர்
சென்னை: வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம் என்று ஆளுநர் ரவி தனது ஆசிரியர் தின வாழ்த்தில் பாரதம் என்று குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் அஸ்ஸாம் மாநில முதல்வரும் தனது ட்விட்டரில் பாரத குடியரசு என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் பெயர் பாரதம் என்று மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு எதிர்கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாரத தேசம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கூறப்படுகிறது என்றும் இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர் கொடுத்த பெயர் என்றும் பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு பாரத் குடியரசுத் தலைவர் என குறிப்பிட்டு அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்திய குடியரசுத் தலைவர் என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் குடியரசுத் தலைவர் என இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்,என் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்துச்செய்தியில்,
#தேசியஆசிரியர்தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதே போல அஸ்ஸாம் மாநில முதல்வர் ஹிம்மந்த் பிஸ்வா தனது ட்விட்டர் பக்கத்தில், நமது நாகரிகம் அமிர்த காலை நோக்கி தைரியமாக முன்னேறி வருவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். அஸ்ஸாம் மாநில முதல்வர். இந்தியாவின் பெயர் பாரதம் என்று மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் அஸ்ஸாம் மாநில முதல்வரும் தங்களின் ட்விட்டரில் பாரதம் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
வரும் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வெற்றிக்காக பாஜக பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது. இன்னும் என்னென்ன மாயாஜாலங்களை செய்யப்போகிறதோ என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications