பூந்தமல்லியில் பூட்டியிருந்த வீடு.. வீசிய துர்நாற்றம்.. குரைத்தபடியே இருந்த நாய்கள்.. பெண் தலைமறைவு
சென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வீட்டுக்குள் பராமரிப்பு இன்றி பரிதாப நிலையில் அடைத்து வைக்கப்பட்ட 18 நாய்கள் அதிரடியாக மீட்கப்பட்டன. நாய்களை வீட்டுக்குள் பரிதாப நிலையில் அடைத்து வைத்த பெண் தலைமறைவான நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டினை பிரியா என்பவர் வாடகைக்கு எடுத்து, நாய்களை பராமரித்து வந்தார். அந்த வீட்டில் வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் வீடுகளில் பராமரிக்க முடியாத நாய்களை இங்கு கொடுத்துவிட்டு செல்வது வழக்கம். அவர்களிடம் விலங்கு ஆர்வலரான பிரியா குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு நாய்களை பராமரித்து வந்துள்ளார். இதனால் அந்த வீட்டில் எப்போதும் அதிக அளவிலான நாய்கள் இருப்பது வழக்கம்

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நாய்கள் பராமரிக்கப்படாமல் அந்த வீடு பூட்டியே கிடந்துள்ளது. பிரியா வீட்டுக்கே நீண்ட நாட்களாக வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாய்கள் முறையாக உணவுகள் கிடைக்காமல் அவை நாள் முழுவதும் குரைத்துக்கொண்டே இருந்தன. சரியான பராமரிப்பு இல்லாததால் நாய்கள் அசுத்தம் செய்து வைத்திருந்தன. இவை சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததால் அந்த பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசியது.
முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு நாய்களுக்கு வழங்கப்பட்டு மீதம் இருந்த இறைச்சிகள், உணவுகள் அழுகிய நிலையில் இருந்தன. இதனால் உணவு கிடைக்காமல் பரிதாப நிலைக்கு மாறிய நாய்கள், ஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டு காயம் அடைந்து காணப்பட்டன. சில நாய்கள் யாராவது உணவு தரமாட்டார்களா என்று ஏங்கி மாடியில் ஏறி நின்று குலைத்தன. இதனை பார்த்து பக்கத்து வீட்டில் வசிக்கும் சிலர் நாய்கள் மீது இரக்கப்பட்டு தங்களது வீட்டு மாடியில் இருந்து நாய்களுக்கு உணவுகளை வழங்கி வந்துள்ளார்கள்.
இந்நிலையில் நாய்களின் அசுத்தம் காரணமாக அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசியதாலும், இடைவிடாமல் நாய்கள் குரைத்து கொண்டே இருந்ததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தனியார் தொண்டு நிறுவனத்தினரிடம் இதுபற்றி தெரிவித்தனர். இதையடுத்து விலங்குகள் நல வாரிய அமைப்பினை சேர்ந்த ஓய்வுபெற்ற டாக்டர் மதனகோபால் தலைமையில் விலங்குகள் நல வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, பராமரிப்பு இன்றி வீட்டுக்குள் பரிதாப நிலையில் அடைத்து வைத்திருந்த 18 நாய்களை மீட்டார்கள்.
இதுபற்றி பராமரிப்புக்காக விட்டுச்சென்ற அதன் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து தங்கள் நாய்களை மீட்டு சென்றார்கள். அவற்றில் உரிமையாளர்கள் வந்து மீட்டு செல்லாத சில நாய்கள் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும், தனியார் விலங்குகள் நல பராமரிப்பு மையத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.
நாய்களை பராமரிக்காமல் பட்டினி போட்டு மனிதாபிமானமற்ற முறையில் விட்டு சென்ற பிரியா குறித்து பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு வீட்டை எடுத்து நாய்களை பராமரித்து வந்த பிரியா தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்து தெரியவில்லை. தலைமறைவான பிரியாவை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
ஈரோடு லட்சுமி நகர் பண்ணையில் நெளிந்த சாரைப் பாம்பு.. நாய் கிட்ட போன உடனே அந்த அதிர்ச்சி சம்பவம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு












Click it and Unblock the Notifications