ஆதித்யா எல்1 “ஆட்டம் ஸ்டார்ட்”.. பூமியிலிருந்து 50,000 கிமீ தூரத்தில் வெப்பம் எப்படி? ஆய்வு ஆரம்பம்
சென்னை: கடந்த சில வாரங்களுக்கு முன் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்1 விண்கலம், எல்1 புள்ளியை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ள நிலையில், ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறது.
சந்திரயான் 3 இன் வெற்றியை தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி காலை 11.50 மணியளவில் ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தை PSLV C57 ராக்கெட் விண்ணில் சுமந்து சென்றது. இதனை ஏவுவதற்கான கவுன்டவுன் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி காலை 11.50 மணிக்கு தொடங்கியது .

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சமமான ஈர்ப்பு விசையை கொண்டு உள்ள எல்1 என்ற புள்ளியை 100 முதல் 120 நாட்கள் பயணித்து இந்த விண்கலம் அடைய உள்ளது. ஆதித்யா எல் 1 புள்ளியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்த பிறகு ஈர்ப்பு விசை, கதிர்வீச்சு, சூரிய புயல், கொரோனா, பிளாஸ்மா குறித்து ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது.
இந்தியாவால் சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட முதல் விண்கலம் இந்த ஆதித்யா எல் 1 க்கும் உள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி நிகர் சாஜி தலைமையிலான குழு கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை வடிவமைத்தது. இதன் சோதனைகளை வெற்றிகரமாக முடிந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த விண்கலம் சூரியனில் இருந்து 149 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவு வரை இது பயணித்து எல் 1 என்ற புள்ளியை அடையும். அதன் வெப்பத்தை தாங்கும் அளவுக்கு இது திடமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆதித்யா எல்1 விண்ணில் செலுத்தப்பட்டதில் இருந்து புவியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வந்தது. கடந்த 16 நாட்களாக புவியை சுற்றி வந்த ஆதித்யா எல்1 விண்கலம், நேற்று அதில் இருந்து விலகியது. இதனை தொடர்ந்து சூரியனை ஆய்வு செய்வதற்கான சமமான ஈர்ப்பு விசையை கொண்ட லக்ரான்சியன் புள்ளியை நோக்கி ஆதித்யா எல்1 பயணத்தை தொடங்கி இருப்பதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.
புவியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இந்த எல் 1 புள்ளியை 110 நாட்கள் பயணம் செய்து ஆதித்யா எல்1 அடைய இருக்கிறது என இஸ்ரோ ட்விட்டரில் தெரிவித்து உள்ளது. மற்றொரு பதிவில், ஆதித்யா எல்1 விண்கலம் அறிவியல் தகவல்களை சேகரிக்க தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தெரிவித்து இருக்கிறது.
அதில் இருக்கும் ஸ்டெப்ஸ் எனப்படும் கருவி, அளவீடுகளை தொடங்கி உள்ளது. பூமியில் இருந்து 50 ஆயிரம் கிலோ தொலைவில் உள்ள அதிக வெப்பம், ஆற்றம், அயான்கள், எலக்டிரான்களை அது அளவிட தொடங்கி உள்ளது. அது அனுப்பும் தகவல்கள் பூமியை சூழ்ந்து இருக்கும் துகள்களை பகுப்பாய்வு செய்ய உதவும் என இஸ்ரோ கூறியுள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications