Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொத் பொத்தென விழும் கட்டிடங்கள்.. தமிழகத்தை அதிர வைத்த விபத்துகள்.. லேட்டஸ்ட் திருவொற்றியூர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூர் அரிவாங்குளத்தில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் இன்று காலை லேசாக விரிசல் விழுந்துள்ளது.

அதைப்பார்த்த மக்கள் உடனடியாக வெளியேறத் தொடங்கிய வேளையில் எதிர்பாராதவிதமாக கட்டிடம் மொத்தமாக நொறுங்கி விழுந்தது. இந்த கட்டிடத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் வெளியேறியதால் நல்ல வேலையாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

மவுலிவாக்கம் கட்டிட விபத்தை மறக்க முடியுமா?

மவுலிவாக்கம் கட்டிட விபத்தை மறக்க முடியுமா?

ஆனாலும் மக்கள் யாரும் சிக்கியுள்ளார்களா என்பதை அறிய தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சமீப காலமாக குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு கட்டிடங்கள் சேதம் அடைந்து வரும் செய்தியை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். முதன் முதலாக 2014-ம் ஆண்டு சென்னை மவுலிவாக்கம் கட்டிட விபத்துதான் தமிழகத்தையே உலுக்கியது.

 61 பேர் உயிரிழப்பு

61 பேர் உயிரிழப்பு

சென்னை மவுலிவாக்கத்தில் 11 மாடிகொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் 2014-ம் ஆண்டு ஜூன் 28-ம் தேதி பலத்த இடியுடன் கூடிய மழையின் போது 11 மாடி கட்டடம் இரண்டாக பிளந்து தரை மட்டமானது. இந்த கோர விபத்தில் 61 பேர் பலியாகினர். கட்டடத்தின் உரிமையாளர், பெண் ஆர்க்கிடெக்ட உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு தமிழக அரசு அடுக்குமாடி கட்டிடம் தொடர்பாக பல்வேறு விதிகளை கொண்டு வந்தது. காலப்போக்கில் அது காற்றில் பறந்து போனது.

 புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம்

புளியந்தோப்பு கே.பி.பார்க் கட்டிடம்

இதனை தொடர்ந்து இந்த ஆண்டு சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் அடுக்குமாடி குடியிருப்பில்தான் வேறு ஒரு நிலைமை எற்பட்டது. புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் 112 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட 1,920 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் சுவர்கள் பலவீனமாக இருப்பதாகவும், கட்டிடத்தை தொட்டாலே சிமெண்ட் பூச்சு உதிர்வது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்ய சென்னை ஐ.ஐ.டி நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

சிமெண்ட் பூச்சு வேலை மோசம்

சிமெண்ட் பூச்சு வேலை மோசம்

ஐ.ஐ.டி நிபுணர் குழுவினர் நடத்திய ஆய்வில் அடுக்குமாடிக் குடியிருப்பு சிமெண்ட் பூச்சு வேலை மோசமாக உள்ளது என்றும் குடியிருப்பில் டைல்ஸ் கற்கள் சரியாக பொருத்தப்படவில்லை. பம்ப் மோட்டார்கள், மீட்டர் போர்டுகள் மற்றும் மின்சார இணைப்பு சாதனங்களிலும் குறைபாடு உள்ளதாகவும் தெரியவந்தது. இந்த் கட்டுமானத்தை மேற்கொண்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

நெல்லை சாப்டர் பள்ளி விபத்து

நெல்லை சாப்டர் பள்ளி விபத்து

இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நெல்லை சாப்டர் பள்ளியில் கழிவறை கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இப்படியாக தமிழகத்தில் கட்டிட விபத்து தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்த எல்லா அசம்பாவிதங்களும் பொறியியல்ரீதியான குறைபாடுகளால் நிகழ்ந்தவை. கட்டிடங்களை எப்படி வடிவமைக்க வேண்டும், தரக் கட்டுப்பாடுடன் எப்படிக் கட்ட வேண்டும் என்பவற்றுக்கு விரிவான பொறியியல் விதிகள் உள்ளன. பயன்பாட்டுக் காலத்தில் பராமரிப்பு விதிகள் உள்ளன.

விபத்துகளை தடுப்பது எப்படி?

விபத்துகளை தடுப்பது எப்படி?

ஒரு கட்டிடம் இனி பயன்பாட்டுக்கு ஒவ்வாது என்று முடிவெடுப்பதற்கும் விதிகள் உள்ளன. ஒவ்வொரு கட்டிடத்திலும் இந்த விதிகள் அனுசரிக்கப்படுகின்றனவா என்று அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.கட்டிடம் முறையாகக் கட்டப்படுகிறதா என்று அரசின் சார்பாக யாரும் ஆய்வு செய்வதில்லை. எல்லாப் பொறுப்பும் கட்டிட உடைமையாளருக்கே என்கிற இப்போதைய நடைமுறை பல விபத்துகளுக்கு வழி வகுக்கிறது. இந்த முறை மாற வேண்டும். தகுதி வாய்ந்த கட்டிடக் கலைஞர்களும், கட்டிடவியல் பொறியாளர்களும் அங்கீகரிக்கப்பட்டு, வடிவமைப்புக்கும் கட்டுமானக் காலத்தில் மேற்பார்ப்பதற்கும் அவர்கள் பொறுப்பாக்கப்பட வேண்டும்.

ஆண்டுதோறும் பரிசோதிக்க வேண்டும்

ஆண்டுதோறும் பரிசோதிக்க வேண்டும்

பயன்பாட்டில் இருக்கும் கட்டிடங்களை ஆண்டுதோறும் பரிசோதிக்க வேண்டும். கட்டுமானத் துறையில் அனுபவம் மிக்க ஒரு துறைதான் அரசுக் கட்டிடங்களை மேற்பார்த்து தகுதிச் சான்றிதழ் வழங்க வேண்டும். பொதுமக்கள் பயன்படுத்தும் தனியார் கட்டிடங்களுக்குத் தகுதிச் சான்றிதழ் வழங்குகிற பணியை அங்கீகரிக்கப்பட்ட கட்டிடவியல் பொறியாளர்களுக்கு வழங்கலாம். தாங்கள் வழங்குகிற சான்றிதழுக்கு அவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டும். அதாவது, தவறிழைத்தால் தண்டனை இருக்க வேண்டும். இப்படி செய்தால் கட்டிட விபத்துகளை தவிர்க்க முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+